பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 செளந்தர கோகிலம் மாத்திரம் மிஞ்சி நின்றதென்றே நாம் கூறவேண்டும். அத்தகைய நிலைமையில் அவன் அநேகமாய்ப் பிணம் போலவே கிடந்தான் இரவு முற்றிலும் அவனது குடல், வயிறு முதலிய கருவிகள் ஸ்தானபேதப்பட்டு நிலைதடுமாறிப் புண்பட்டு ஒரே ரணம் போல மாறிப்போய் விட்டமையால், அவைகளை ஆற்றி மறுபடியும் அவனுக்குப் பலமுண்டாக்கக் குறைந்தது இரண்டு தினங்களாகிலும் செல்லுமென்று வைத்தியர் கூறிவிட்டார். ஆயினும், அவன் அந்தக் கண்டத்திற்குத் தப்பிப் பிழைத்தான் என்ற சந்தோஷச் செய்தி திவானினது மனத்தின் துயரச் சுமையில் பெரும் பாகத்தையும் விலக்கியது. அவர் தமது சொந்த மனவேதனைகளிடையில் அடிக்கடி எழுந்து போய்ப் போய் முத்துசாமியின் தேறுதலைக் கவனித்து வந்தார். அன்றையதினம் முழுவதும் முத்துசாமி உயிரற்ற வெற்றுடல் போலவே கிடந்தான். ஆயினும் வாந்தி, வயிற்றுப்போக்கு முதலிய கெட்ட குறிகள் அடியோடு நின்று போயின. ஆயுர்வேத வைத்தியர் தமது பசியையாவது, தாகத்தையாவது, தூக்கத்தை யாவது, தேக அலுப்பையாவது, பொழுதையாவது சிறிதும் பொருட்படுத்தாமல் முத்துசாமிக்கு அருகிலேயே இருந்து, அடிக்கடி மாறுபட்ட அவனது நிலைமைக்குத் தக்கபடி ஒளவுதங்களையும், சிகிச்சைகளையும் பிரயோகம் செய்து கொண்டே இருக்க, அன்றைய பகலும் இரவும் கழிந்தன. முத்துசாமி நீராகாரம் பருகி இரவு பகல் தூங்கித் துரங்கி விழித்தான். ஆதலால், அவன் வலுவடைந்து தெளிவு பெற்று மறுநாட் காலையில் எழுந்து உட்கார்ந்தான். “அரண்மனை வைத்தியர் பாஷாணம் தின்றவனைப் பிழைக்கவைத்து விட்டார்’ என்ற செய்தி அந்த ஊர் முழுதும் பரவியது. ஆகையால், அந்த ஊர் வாசிகள் அனைவரும் அவரை அபாரமாகப் புகழ்ந்து அதே பேச்சாய்ப் பேசத் தொடங்கினர். அவர்களுள் பலர் கும்பல் கும்பலாக வந்து விஷமுண்டு பிழைத்தவனையும், அவனைப் பிழைக்க வைத்த வைத்திய நிபுணரையும் பார்த்துத் தமது வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திவிட்டுச் சென்றனர். கூடாரத்திலிருந்த சிப்பந்தி களும் வைத்தியரும் முத்துசாமி பிழைக்க வேண்டுமே என்ற அபாரமான கவலையும் ஏக்கமும் விஸ்னமும் கொண்டு தவித்து,