பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 26. இன்னொன்றை சதிதொடர் மங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மூன்றாவதை அந்த ஊரிலிருந்த திவானுடைய பிரதம குமாஸ்தாவுக்கும் ஆள்கள் மூலமாக அனுப்பிவிட்டு, சாமியார் வேஷம் பூண்டிருந்த திவானை நோக்கி, போலீஸார் வருகிற வரையில் அவ்விடத்திலே இருக்கும்படி கேட்டுக்கொண்டார். சாமியார் தாம் தமது குருபூஜையை உத்தேசித்து திருவனந்த புரத்திற்கு அன்றையதினம் போக வேண்டுமாதலால், தாம் அங்கே போய்விட்டு மறுநாள் அந்த ஊருக்கு வருவதாகக் கூறினார். - உடனே கிராம முனிசிப்பு யோசனை செய்து, அவருடைய வாக்குமூலத்தை ஒரு காகிதத்தில் எழுதி அதன் அடியில் அவரது கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார். சாமியார் வாக்கு மூலத்தின் அடியில் மாயா விபூதிப் பரதேசி என்று தமது கையெழுத்தைச் செய்தபின் கிராம முனிசீப்பு முதலியோரிடம் செலவு பெற்றுக் கொண்டு அந்த ஊரை விட்டுப் புறப்பட்டு திக்கு திசையறியாமல் திருவனந்தபுரம் இருந்த திசைக்கு எதிர்த் திசையில் விரைவாகச் சென்று மறைந்து போய்விட்டார். அவ்வாறு சென்றவர் அன்றைய பகற்பொழுது முழுதும் பிரயாணம் செய்து மாலை ஐந்து மணி நேர சமயத்தில் ஒரு சிறிய ஊரை அடைந்தார். அதற்குமுன் அவர் உழைத்தே அறியாத மென்மையான தேகமுடைய மனிதராதலால், நீடித்த தேக உழைப்பினாலும் மனவேதனையினாலும் அவர் அயர்ந்து சோர்ந்து களைத்துத் தளர்ந்து மயங்கிக் கீழே விழத்தக்க நிலைமையை அடைந்துவிட்டார். கடுமையான பசியும் தாகமும் உண்டாகி அவரை வதைக்கத் தொடங்கின. ஆயினும், அவர் தமக்குப் பசிக்கிறதென்று அதுவரையில் எவரிடமும் கூறியறியாத மகா மானியான மனிதராதலால், தமது வயிற்றுக் கொடுமையை வெளியிட வெட்கி, அந்த ஊருக்கு வெளியில் இருந்த ஒரு குளத்தில் நாலைந்து கை தண்ணிர் எடுத்து அருந்திவிட்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டுத் திண்ணையை அடைந்து, "சம்போ சங்கரா மகா தேவா" என்று பன்முறை கடவுளைத் தியானித்து விட்டு அப்படியே திண்ணையில் படுத்துக் கடுமையான நித்திரையில் ஆழ்ந்து போய்விட்டார்.