பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்கள் எலி 27 தத்தை யாரிடத்திலாவது கொடுத்து, என் மகனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அது சாத்தியப்படா விட்டால், இந்தக் கடிதத் தின் விஷயமாவது அவனுக்கு எட்டும்படிச் செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய கடைசி வேண்டுகோள். தங்களுக்கும், தங்களுடைய குழந்தைகளுக்கும் ஈசன் அருளால் தீர்க்காயுசும், சர்வாபீஷ்டமும் பரிபூரணமாக ஏற்பட வேண்டும். இங்ங்ணம், தங்களை என்றும் மறவாத கற்பகவல்லியம்மாள் என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் பூஞ்சோலையம்மாள் படிக்கும்போதே கோகிலாம்பாளது கண்களிலிருந்து கண்ணிர் மாலை மாலையாகப் பொங்கி வழிந்தது. அடிக்கடி அழுகையும், துக்கமும் நெஞ்சையடைத்துக் கிளம்பின. அவர்கள் இருவரது தேகங்களும் பதறின. இருவரும் ஒருவரோடொருவர் என்ன பேசுவது என்பதை அறியாமல் கதிகலங்கி அளவு கடந்த துயரமடைந்து தீயிலிட்ட வெண்ணெய்போல இளகி உருகி ஒய்ந்திருந்தனர். அந்தச் சமயத்தில் ஒரு வேலைக்காரி, 'அம்மா அம்மா” என்று வாசலிலிருந்து கூப்பிட்ட குரலைக் கேட்டு திடுக்கிட்ட பூஞ்சோலையம்மாள், 'யாரது? வா இப்படி” என்று மறுமொழி கூற, உடனே வேலைக்காரி உள்ளே வந்து, எஜமானே! வாசலில் யாரோ ஒரு மனிதன் வந்திருக்கிறான். அவன் இந்தக் கடிதத்தை மூத்த குழந்தையிடத்தில் கொடுக்கச் சொன்னான்' என்று கூறிய வண்ணம் ஒரு கடிதத்தை நீட்டினாள். அது கற்பகவல்லியம்மாள் எழுதப்பட்டதாக இருக்குமோ என்றும், அந்த அம்மாள் ஒரு கால் தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டு எங்கேயாவது உயிரோடு இருக்கக் கூடாதா என்றும் அவர்களது மனம் உடனே நினைத்தது. பூஞ்சோலையம்மாள் அந்த வேலைக்காரியை வெளியில் போயிருக்கும்படி அனுப்பி விட்டு, அந்தக் கடிதத்தின் மேல் விலாசத்தைப் பார்த்து, "குழந் தாய்! இது உனக்கல்லவா எழுதப்பட்டிருக்கிறது! நீயே பிரித்துப் படி” என்று கூறியவண்ணம் கோகிலாம்பாளிடத்தில் கொடுக்க,