பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ! 37 பறையருக்குப் பக்கத்துலே இடிச்சிக்கினு ஒக்காரப்பிடாதல்ல. அதுக்காவத்தான் என்னே அனுப்பிச்சாங்க" என்றான். சப் இன்ஸ்பெக்டர், "சரி, நீயே இருநூறு ரூபாய்க்கு ஜாமீன் கொடுத்திருப்பதாக முச்சலிக்கை எழுதிக் கையெழுத்துச் செய்து விட்டுப்போ. விசாரணைத் தேதி என்றைக்கென்று உனக்கு நோட்டீஸ் வரும். அப்போது வந்து ஆஜராகவேண்டும்' என்றார். முருகேசன் அதற்கிணங்கி, இருநூறு ரூபாய்க்கு ஜாமீன் கொடுத்திருப்பதாக எழுதப்பட்ட முச்சலிக்கையில் கையெழுத்துச் செய்து விட்டு சப் இன்ஸ் பெக்டருக்கும் ஜெவானுக்கும் கும்பிடு போட்டபின் அவ்விடத்தை விட்டு வெளியில் வந்து சேர்ந்தான். அவனைப் பிடித்துச் சென்ற போலீஸ் ஜெவான் மறுபடியும் முன்னிருந்த இடத்திற்குப் போய் நின்றுகொண்டான். ராஜரத்ன முதலியாரது பெட்டி வண்டியில் வரும் வண்டிக்காரனை வண்டியிலிருந்து இறக்கி ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் அவ்விடத்தில் அரை நாழிகை காலமாவது அவனை நிற்கவைத்து பிறகு விடும்படி போலீஸ் பெரிய இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை முதல்நாளிரவில் அந்த ஜெவானுக்கு உத்தரவு செய்திருந்தார். ஆதலால், அந்த ஜெவான் தான் இன்ஸ்பெக்டரது விருப்பப்படியே காரியத்தை முடித்துவிட்டதாக எண்ணித் தனக்குத்தானே மிகுந்த சந்தோஷமடைந்தவனாய்த் தனது அலுவலைப் பார்க்கத் தொடங்கினான். ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்த முருகேசன் தன் எஜமானரது பெட்டி வண்டி ஒருகால் தன் வருகையை எதிர்பார்த்து எங்கேயாவது நிறுத்தப் பட்டிருக்குமோ, அல்லது அது வெகு தூரத்திற்கு அப்பால் போய்க்கொண்டிருக்குமோ என்ற நினைவினால் தூண்டப் பட்டவனாய், நாற்புறங்களிலும் இரண்டு மூன்று தரம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு, வண்டி செல்லவேண்டிய திக்கில் வெகுதூரம் வரையில் தனது பார்வையைச் செலுத்தி உற்று நோக்கினான். பெட்டி வண்டி எங்கும் காணப்படவில்லை. அவன் உடனே அவ்விடத்தை விட்டுத் தங்கசாலைத் தெருவை நோக்கி விரைவாகச் செல்லலானான். வண்டி தங்கசாலைத்