பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ! 39 லெல்லாம், "2075-ம் நம்பர் வீடு எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வியையே கேட்டு, எவ்வித நிச்சயமான மறுமொழியையும் பெறாமல், ஒன்றேகால் மைல் தூரமிருந்த அந்த நீண்ட வீதியின் தெற்குக் கோடிக்குப் போய்ச்சேர ஏறக்குறைய ஒரு நாழிகை சாவகாசம் பிடித்தது. அவ்விடத்தை அடைந்த வண்டிக்காரன் அங்கிருந்த வீடுகளின் நம்பர்களை விவாரித்தான். ஒரு வரிசை முதலாவது நம்பரின் ஆரம்பமாயிற்று; இன்னொரு வரிசை 513-வது நம்பரில் முடிந்தது. 518-வது நம்பருக்கு மேற்பட்ட நம்பரே அந்தத் தெருவில் இல்லையென்றும், 2075- என்பது 275-ஆக இருக்க வேண்டுமென்றும், அவன் தப்பாகச் சொல்லுகிறான் என்றும் ஜனங்கள் கூறி, 275-வது நம்பர் வீட்டில் போய் விசாரிக்கும்படி அவனுக்கு யோசனை சொன்னார்கள். அவன் மிகுந்த கலக்கமும் கலவரமுமடைந்து அந்த இடத்தை விட்டு வெறிகொண்டவன் போல மறுபடியும் வடக்கு திக்கில் ஒட ஆரம்பித்து, "275-வது நம்பர் எங்கே இருக்கிறது” என்ற கேள்வியையே கேட்டுக்கொண்டு போக அந்த இலக்கமுள்ள வீட்டை அவன் கண்டுபிடிப்பதற்கு அவன் இன்னொருமுறை அந்தத் தெருவின் பெரும் பாகத்தையும் கடந்து கிட்டத்தட்ட வடக்கு முனைக்கே போக நேர்ந்தது. அவன் 275-ம் நம்பர் வீட்டையடைந்து விசாரிக்க, அந்த வீட்டிலிருந்தவர்கள் அது ஒர் அச்சுக்கூடமென்றும், அவ்விடத்திற் குப் புரசைப்பாக்கத்திலிருந்து யாரும் வரவில்லையென்றும் கூறினர். அந்தச் செய்தியைக் கேட்ட முருகேசன் விவரிக்க இயலாத கலக்கமும் குழப்பமும் ஏமாற்றமும் விசனமும் அடைந்து, தான் அதற்கு மேல் என்ன செய்வதென்பதை அறியாதவனாய்த் திகைத்துக் கால் நாழிகை நேரம் வரையில் அப்படியே நின்றுவிட்டான். சிறிது நேரத்தில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. போலீஸ் ஸ்டேஷனண்டை வண்டி தன்னைவிட்டுப் பிரிந்துபோன இடத்திற்குப் போய், அவ்விடத் தில் உள்ள வண்டிச் சுவடுகளைப் பின்பற்றித் தொடர்ந்து போய்ப் பார்க்கலாமென்ற எண்ணம் உண்டானது. ஆகையால், அவன் அவ்விடத்தை விட்டும் முன்னிலும் அதிக விசையோடு நடந்து கால் நாழிகை காலத்தில் போலீஸ் ஸ்டேஷனிருந்த