பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ! 41 மிங்கும் சென்றன. மேல்மூச்சும் இறைப்பும் தோன்றுகின்றன. நாவறண்டு போய்விட்டது. வறட்சியும் தாகமும் அதிகரித்து அவனை வதைக்க ஆரம்பித்தன. அத்தகைய பரிதாபகரமான நிலைமையில், முருகேசன் பங்களாவிற்குள் நுழைந்து, தான் வந்திருப்பதாகப் பூஞ்சோலையம்மாளுக்குச் செய்தி சொல்லி அனுப்பினான். அப்போது பூஞ்சோலையம்மாள் என்ன நிலைமையில் இருந்தாள் என்பதை நாம் கூறுமுன் இன்னொரு முக்கியமான விஷயத்தைத் தெரிவிப்பது அவசியமாக இருக்கின்றது. அதற்கு முந்தியநாளிரவில் புஷ்பாவதியம்மாள் அந்தப் பங்களாவிலேயே இருந்தாள் என்பது முன்னரே சொல்லப்பட்ட விஷயம். ஆனால், கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாரான சுந்தரமூர்த்தி முதலியார் மாத்திரம், தாம் மறுநாட்காலையில் அங்கு வருவதாகக் கூறிவிட்டுத் தமது சொந்த ஜாகைக்குப் போய் விட்டார். அதன்பின்னர் செளந்தரவல்லியம்மாளுக்கும் கற்பகவல்லியம்மாளுக்கும் நேர்ந்த சந்திப்பின் விவரமும், கற்பகவல்லியம்மாள் பூஞ்சோலையம்மாளுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, பங்களாவை விட்டுப் புறப்பட்டுப்போன செய்தியும் முன்னரே கூறப்பட்டுள. அந்த இரவு கழிய, பொழுது விடிந்தபின்னர், பூஞ்சோலையம்மாளும் கோகிலாம்பாளும் கற்பகவல்லியம்மாளது சயன அறைக்குச் சென்று அந்த அம்மாளால் எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த காலத்திலும், அதன்பிறகு கோவிந்தசாமி கொணர்ந்து கொடுத்த கண்ணபிரானது கடிதத்தைப் படித்த காலத்திலும், புஷ்பாவதி அவர்களோடுகூட இருக்கவில்லையென்பது தெரிந்த விஷயம். புஷ்பாவதி எப்போதும் காலைவேளையில் சிறிது தாமதமாகவே படுக்கையை விட்டு எழுந்துவரும் சுபாவம் உடையவள். அதுவு மின்றி, முதல்நாள் முழுதும் ஒன்றன் பின் ஒன்றாக நேர்ந்த பல வகைப்பட்ட சம்பவங்களால் ஏற்பட்ட மனவெழுச்சியினாலும் தேக அலட்டலினாலும் மற்ற நாட்களைவிட அதிகமாய் அலுத்துப் போயிருந்தமையால், புஷ்பாவதி எழுந்து தேகசுத்தி செய்துகொண்டு பூஞ்சோலையம்மாள் இருந்த இடத்திற்கு வந்த காலத்தில், அவர்கள் கண்ணபிரானது கடிதத்தைப் படித்து,