பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ 43 இவர்களுடைய நற்குணத்தையும் நன்னடத்தையையும் பார்த்த பிறகு, ஒருவிதமான கவர்ச்சியும், காந்த சக்தியும் என்னை இவர்களிடம் இழுத்துக்கொண்டே இருந்தன. எது எப்படி இருந்தாலும், இந்த அம்மாள் தற்கொலை செய்துகொள்வதாக எழுதியிருப்பதைக் கேட்பது பரமசங்கடமாக இருக்கிறது.இந்த மகா கஷ்டமான சங்கதியைக் கேட்கவா, நான் இன்று எழுந்தவுடன் நேராக இங்கே வந்தேன். ஐயோ! இந்தச் சமயம் என் மனம் துடிக்கிற துடிப்பை அந்தக் கடவுள்தான் அறிய வேண்டும். அதிருக்கட்டும், நீங்கள் இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் என்ன செய்தீர்கள். இந்த அம்மாளைத்தேடி அழைத்துவர, ஆள்களை அனுப்பினர்களா?” என்று மனம் நைந்து நிரம்பவும் உருக்கமாகக் கூறினாள். அவளது சொற்களைக் கேட்ட கோகிலாம்பாள், பூஞ்சோலையம்மாள் ஆகிய இருவரது. கண்களிலிருந்தும் கண்ணிர் மளமளவென்று பெருகி வழிந்தது. அபாரமாகப் பொங்கியெழுந்த துயரப் பெருக்கினால், அவர்கள் நிலைகலங்கிப் போயினர். பூஞ்சோலையம்மாள்,'அம்மா இந்தக் கடிதத்தைப் படித்த உடனே சுமார் 25-ஆள்களைப் பிடித்து நாலாபக்கங்களிலும் போய்த்தேடி, இந்த அம்மாள் எங்கே இருந்தாலும் அழைத்து வரும்படி அனுப்பி இருக்கிறோம். ஆளாலும், இந்த அம்மாள் நேற்று இரவிலேயே புறப்பட்டுப் போய்விட்டார்கள், ஆகையால், இந்நேரம் வரையில் அவர்கள் உயிரோடிருக்க வேண்டுமே என்ற கவலைதான் பெரிதாக எழுந்து வதைக்கிறது. ஈசன் செயல் எப்படி இருக்கிறதோ பார்க்கலாம்” என்றாள். - புஷ்பாவதி, 'திடீரென்று நேர்ந்த அவமானத்தைத் தாங்க மாட்டாமல், அந்த ஆத்திரத்தில் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்ற ஒரு துடிப்பு ஏற்பட்டிருந்தாலும், கொஞ்ச நேரத்திற்குப் பிறகாவது, தங்களுடைய பிள்ளையாண்டானு டைய நினைவு வராதா? அதனால் அந்தத் தீர்மானம் கொஞ்சம் தளர்வடையாதா? அநேகமாய் அந்த அம்மாள் உயிரோடுதான் இருப்பார்களென்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நீங்கள் சொல்வதுபோல, கடவுள் செயல் எப்படி இருக்கிறதோ? நீங்கள் ஏராளமான ஆள்களை அனுப்பி இருக்கிறீர்கள், என்