பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 செளந்தர கோகிலம் நினைத்துக் கொள்ள மாட்டீர்களென்றும் அவரே சொல்வி விட்டுப் போய்விட்டார். உங்களுடைய பிரியம் போலவே நான் இன்று முழுதும் இங்கேயே இருந்து, நாளைய தினம் காலையில் எங்களுடைய ஜாகைக்குப் போகிறேன்” என்றாள். அதைக் கேட்ட பூஞ்சோலையம்மாள் மிகுந்த களிப் படைந்தவளாய், "அம்மா உண்மையான பிரியம் உடையவர்கள் ஆபத்து வேளையில் கைவிடமாட்டார்களென்று ஜனங்கள் சொல்லுவார்கள். நீங்கள் நேற்றுமுதல் எங்களோடு இருப்பது எங்கள் மனசுக்கு ஆயிரம் யானையின் பலத்தை உண்டாக்கு கிறது, நீங்கள் எவ்வளவோ மேலான நிலைமையிலிருப்பவர்கள், பிரியத்திற்குக் கட்டுப்பட்டிருந்தாலன்றி வேறு எதைக் கருதியும் நீங்கள் எப்படிப்பட்ட இடத்திலும் போயிருக்கக் கூடியவர்கள் அல்ல என்பது எங்களுக்குத் தெரியாதா? எப்பேர்ப்பட்டவர்கள் வருந்தியழைத்தாலும், நீங்கள் அநாவசியமாக ஒரிடத்திற்குப் போகிறவர்களா? எங்களிடம் வைத்திருக்கும் அபாரமான பிரியத்தினாலும், மதிப்பினாலும், எங்கள் துன்பத்தை உங்களு டையதாக எண்ணி, நீங்கள் இங்கே இருக்க இணங்குகிறீர்கள், இதை நாங்கள் பெருத்த பாக்கியமாக மதிக்க வேண்டும், அப்படியே மதிக்கிறோம், இதனால் நாங்கள் உங்களிடம் வைத்துள்ள பிரியமும் மதிப்பும் முன்னிலும் பன் மடங்கு அதிகரிக்குமேயன்றி. உங்களைப் பற்றி நாங்கள் வித்தியாசமாக ஏன் நினைக்கிறோம்? அப்படி நினைக்கவே மாட்டோம்' என்றாள். அப்போது வேலைக்காரன் தோன்றி பெட்டி வண்டி ஆயத்தமாயிருப்பதாகக் கூற, முன்னர் விவரிக்கப்பட்டபடி கோகிலாம்பாள் புறப்பட்டுப்போய் வண்டியிலேறிக் கொள்ள, கோவிந்தசாமியும், வண்டிக்கார முருகேசனும் வண்டியை ஒட்டிக் கொண்டு போய் விட்டார்கள். அதன்பிறகு பூஞ்சோலை யம்மாளும் புஷ்பாவதியும் செளந்தரவல்லியம்மாள் இருந்த இடத்திற்குப் போய், அவளுடன் சிறிது நேரம் சம்பாஷித்திருந் தனர். முதல் நாளிரவிலேயே கற்பகவல்லியம்மாள் புறப்பட்டு எங்கேயோ போய்விட்டாளென்ற செய்தியைக் கேட்ட