பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. செளந்தர கோகிலம் - பூஞ்சோலையம்மாள் சகிக்க இயலாத ఆమె మ@qTag 'நம்முடைய குழந்தை ஏன் வரவில்லையென்பதைப் பற்றி அவன் ஏதாவது தகவல் தெரிவித்தானா?” என்றாள். வேலைக்காரன், "இல்லை; எஜமானே! அவன் தங்களோடு தனிமையில் ஏதோ சங்கதி சொல்ல வேண்டுமென்று சொன்னான். அவன் இதோ தோட்டத்து வாசலண்டை வந்து நிற்கிறான்' என்றான். அதைக் கேட்ட பூஞ்சோலையம்மாளது மனதில் இன்ன தென்று விவரிக்க இயலாத ஒருவித சஞ்சலமும் கவலையும், ஆவலும், கலக்கமும் தோன்றி வதைக்க ஆரம்பித்தன. அந்த அம்மாள் அந்த வேலைக்காரனை உடனே வெளியில் அனுப்பிவிட்டு புஷ்பாவதியை நோக்கி, 'அம்மா ஐந்து நிமிஷ: நேரம் நீங்கள் இவ்விடத்திலேயே இருங்கள், நான் போய் இதோ வந்துவிடுகிறேன்” என்று நயமாகக் கூறிய வண்ணம் சரேலென்று எழுந்து, அவ்விடத்தை விட்டு வெளியில் சென்று, பல தாழ்வாரங் களையும் கூடங்களையும் கடந்து தோட்டத்திற்குச் செல்லும் வாசலையடைந்து, அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்த முருகேச னைப் பார்த்து, ' ஏனடா முருகேசா நீ மாத்திரம் வந்தாய்? குழந்தை எங்கே? வண்டி எங்கே? நீ மாத்திரம் வந்த காரண மென்ன?’ என்று ஆவலோடு வினவினாள்.உடனே முருகேசன் தன் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறினான். பெட்டி வண்டி ஆணைகவுனியண்டை சென்ற காலத்தில் ரஸ்தாவின் நடுவில் நின்ற போலீஸ் ஜெவான், வண்டி தப்பான பக்கத்தில் போனதென்று பிடித்துக்கொண்டது, பிறகு தன்னோடிருந்த மனிதன் அவனை கெஞ்சிக் கேட்டுக்கொண்டு அந்த ஜெவான் வண்டியைப் போகவிட்டுத் தன்னை மாத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப்போனது, அவ்விடத்தில் தனக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கும் நேர்ந்த சம்பாஷணை, முடிவில் தான் அங்கிருந்து விடப்பட்டு வெளியில் வந்தது, வந்தவுடன் பெட்டி வண்டியைத் தேடிக்கொண்டேபோய், தனக்குச் சொல்லப்பட்ட கதவிலக்கமுள்ள வீடு எங்கே இருக்இறதென்று தான் தங்கசாலைத் தெருவில் அலைந்தது, எங்கும வண்டி காணப்படாமையால் முடிவில் தான் என்ன