பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο செளந்தர கோகிலம் தொடங்கி, தன்னைக் கைது செய்து அழைத்துவந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முதல் நாள் இரவில் தான் அடைபட்டிருந்த இடத்திற்கு வந்து, தன்னோடு அன்பாகவும் இரக்கமாகவும் பேசியது. தான் குற்றமற்றவன் என்பதை அவர் விசாரித்து சந்தேகமறத் தெரிந்து கொண்டதாகக் கூறியது, தான் சாப்பிடும் படி தன்னை அவர் உபசரித்தது. தன் தாயாரை அழைத்துவர ஒரு ஜெவானை அனுப்பியது. சிறிது நேரத்தில் அந்த ஜெவான் திரும்பி வந்து, தன் தாயாரும், மாமியாரும் காலையிலிருந்து ஸ்மரணை தப்பிக் கிடந்ததாகவும், பெண்கள் இருவரும் விசனித்துப் படுத்தபடுக்கையாய் இருந்ததாகவும், அந்த ஜெவான் கோகிலாம்பாளைக் கண்டதாகவும், தான் கடிதம் எழுதி அனுப் பினால் அவள் புறப்பட்டு வரச் சம்மதித்ததாகவும் தெரிவித்தது. அதன்பிறகு தான் கடிதம் எழுதி இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தது, அதை அவர் அந்த ஜெவானிடம் கொடுத்தனுப்பியது ஆகிய விருத்தாந்தங்கள் யாவற்றையும் நடந்ததுபோலவே எடுத்துரைத்தான். அவன் கூறிய வரலாற்றைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் சகிக்கவொண்ணாத வியப்பும் பிரமிப்பும் அடைந்து, 'ஆ! என்ன என்ன! நேற்று ஜெவானாவது பங்களாவுக்கு வரவாவது! இது முழுப் புரட்டாக இருக்கிறதே! நாங்கள் யாரும் ஸ்மரணை தப்பிப் படுத்திருக்கவும் இல்லை, அவன் வரவுமில்லை. கோகிலாம்பாள் எவனுடனும் தனியாகப் பேசவுமில்லை; தான் வருவதாகச் சொல்லவுமில்லையே! யாரோ ஒரு மனிதன் இன்று காலையில் அந்தக் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுத்தான். அதைப் பார்த்தவுடன் என்ன அவசர காரியமோவென்று நினைத்து அவள் புறப்பட்டுவந்தாள். அவளுடன்கூட வண்டிக்கார முருகேசனும், அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்தவனும் வந்தார்கள். வண்டி ஆணைகவுணி போலீஸ் ஸ்டேஷனண்டை வந்தவுடன், வழியில் நின்ற ஒரு போலீஸ் ஜெவான் வண்டி தப்பான பக்கத்தில் வந்ததென்று சொல்லி அதட்டி, முருகேசனை ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டான். கடிதம் கொண்டுவந்த மனிதன் தாங்கள் தங்கசாலைத் தெரு 2075-வது இலக்கமுள்ள வீட்டிற்குப் போவதாகவும், போலீஸ் ஸ்டேஷனில்