பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 செளந்தர கோகிலம் கண்ணபிரான், "சரிதான். அதே மனிதன்தான் நேற்று புரசைப்பாக்கத்துக்குப் போய் வந்ததாகச் சொல்லி முடிவில் கடிதத்தை வாங்கிக்கொண்டு போனவன். சந்தேகமே இல்லை" என்றான். அவர்கள் இருவரும் கூறிய வரலாறுகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வக்கீல், "சரி; நேரமாகிறது; வாருங்கள் போவோம். ஐயா முதலியாரே! அநேகமாய் நான் நாளையதினம் உம்மை ஜாமீனில் விட்டுவிடுவார்கள். அதன்பிறகு நான் மற்ற தகவல்களையெல்லாம் உம்மிடம் கேட்டுக்கொள்ளுகிறேன். உமக்குச் சொந்த ஆகாரம் கொடுக்கவும் மாஜிஸ்டிரேட் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இப்போது இந்த அம்மாள் வீட்டுக்குப் போனவுடன் உமக்கு ஆகாரம் அனுப்புவார்கள். அதுபோலவே நீர் இங்கிருந்து வெளியில் வருகிறவரையில் ஒவ்வொரு வேளையிலும் ஆகாரம் வரும். நீர் கவலைப்படாமல் இரும்" என்றார். உடனே கண்ணபிரான், 'ஐயா என்னுடைய ஆகாரத்தைப் பற்றியாவது என்னைப் பற்றியாவது கவலையில்லை. இப்போது, முதலில் நீங்கள் போய் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்யுங்கள். பெண் rேமமாய் வீடுவந்து சேர்ந்ததென்று செய்தியைக் கேட்கிறவரையில், எனக்குப் பசியாவது, தாகமாவது, துரக்கமாவது உண்டாகப் போகிற தில்லை. கவலையினால் என் மனம் வேதனைப்பட்டுத் தவித்துக்கொண்டே இருக்கும். பெண் வந்துசேர்ந்தவுடனே அந்தத் தகவலை எனக்கு நீங்கள் எப்படியாவது தெரிவிக்க வேண்டும்” என்று கூறி நிரம்பவும் பரிதாபகரமான பார்வை யோடு பூஞ்சோலையம்மாளது முகத்தை நோக்கினான். பூஞ்சோலையம்மாளது மனதும் கண்களும் கலங்கி இளக்க மடைந்தன. தேகம் துடிதுடித்தது. அந்த அம்மாளது நிலைமை கண்ணபிரான்மீது தாங்கள் சிறிதும் அருவருப்பே கொள்ள வில்லையென்றும் தாங்கள் அவன்மீது வைத்த மதிப்பும் வாஞ்சையும் எப்போதும் மாறாமல் இருக்குமென்று அவனுக்கு உறுதிசெய்து கொடுப்பது போலத் தோன்றியது. அதைக்கண்ட கண்ணபிரானது உள்ளம் குளிர்ந்தது. அந்த ஒரு நிமிஷ நேரம்