பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 7 அவமானமும் போதும். நான் இங்கே இருந்தால் இன்னமும் உங்களுக்கு ஏதாவது பெருத்த பொல்லாங்கு வந்து நேரும்; ஆகையால், நான் என்னுடைய ஜாகைக்குப் போய்ச் சேரு கிறேன். என்மேல் கருணை கூர்ந்து, என்னை ஒரு வண்டியில் வைத்து என்னுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்யுங்கள். உங்களுக்கு அந்தக்கோடி புண்ணியமுண்டு; மேகங்கள் கைம்மாறு கருதாமல் அமிர்தம் போன்ற ஜலத்தை உலகத்தாருக்குப் பொழிவது போல, நீங்கள் எங்கள் விஷயத்தில், அன்பையும் ஆதரவையும், மரியாதைகளையும் இதுவரையில் மழைபோலப் பொழிந்ததையெல்லாம் நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். நீங்கள் சந்தோஷமாகவும் செளக்கியமாகவும் நீடுழி காலம் இருந்து வாழவேண்டும் என்று நான் சதா காலமும் கடவுளைத் துதித்துக்கொண்டே இருப்பேன் என்பது உறுதி” என்று கரைகடந்த உருக்கமும், வாஞ்சையும், விசனமும் தோன்றக் கூறினாள். அவளது கண்களிலிருந்து கண்ணிர் பொங்கி மாலையாக வழிந்தது. மனவெழுச்சியும், அழுகையும் கிளம்பி நெஞ்சை அடைத்து முகத்தை விகாரப்படுத்தின. உடம்பும் கை கால்களும் காற்றில் நடுங்கும் மாந்தளிர் போலப் பதறுகின்றன. அந்த அம்மாளது நிலைமை மகா பரிதாபகரமாகவும் அதைக் காணும் கல்லும் கரைந்துருகி வாய்விட்டு அழத்தக்கதாகவும் இருந்தது. அந்த அம்மாளது உருக்கமான சொற்களைக் கேட்கவே, பூஞ்சோலையம்மாளுக்கும் கோகிலாம்பாளுக்கும் மனம் கலங்கியது. கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தது. தேகம் கிடுகிடென்று ஆடியது. அவர்கள் இருவரும் தங்களது விசனத்தைப் பொறாமல் முன்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டனர். தனது தாய் என்ன மறுமொழி சொல் லுகிறது என்பதை உணராமல் தயங்கியதைக் கண்ட கோகிலாம் பாள், தான் அந்தச் சமயத்தில் பேசியே தீரவேண்டும் என்று நினைத்தவளாய் நிரம்பவும் வணக்கமாகவும் மரியாதையாகவும் கற்பகவல்லியம்மாளை நோக்கி, 'அம்மா! தாங்கள் இப்படி விசனப்படுவது எங்களுடைய மனசை வாள்கொண்டு அறுக் கிறது. இன்றைய தினம் நேர்ந்த இரண்டு தீமைகளிலிருந்தும் நாங்கள் தங்களை வெறுத்து விலக்கி விடுவோம் என்றாவது, நாங்கள் தங்களிடத்தில் வைத்திருக்கும் மரியாதை மதிப்பு, நல்ல