பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. செளந்தர கோகிலம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த சமஸ்தானத்திலுள்ள பிரஜைகளை ஆக்கவும் அழிக்கவும் அவருக்குச் சர்வ அதிகாரமும் இருந்ததென்று சொல்வது மிகையாகாது. அத்தகைய மகோன்னத பதவியான திவான் உத்தியோகத்தை, நமது கதை நிகழ்ந்த காலத்திற்குமுன், ஒரு முதலியார் வகித்திருந்தார். அடியில் விவரிக்கப்படும் சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தில் அவருக்கு வயது முப்பத்தைந்து நடந்தது. அவர் அழகான தேகமும், சிவந்த மேனியும், வசீகரமான முகத்தோற்றமும், அத்யாச்சரியகரமான குண அமைப்பும் வாய்ந்தவர். ஓயாமலும், சலியாமலும் உழைக்கும் சுபாவம், மகா கூர்மையான புத்தி, எத்தகைய பெரிய காரியத்தையும் அபூர்வமான திறமையோடு செய்து முடிக்கும் அற்புத சாமார்த்தியம் முதலிய உத்தம லக்ஷணங்களுக்கு ஒர் உற்பத்தி ஸ்தானமாகவும் அவர் விளங்கினார். இரவிலும், பகலிலும் அவரது மனம் தெய்வ பக்தியைப் பெருக்கிக்கொண்டு கடவுளின் நாமங்களையே மனனம் செய்து கொண்டிருக்கும். அவர் இங்கீலீஷ் கல்வியைக் கரைக்கண்டு அதில் உயர்வான பரீட்சையில் தேறிப் பட்டம் பெற்றிருந்தார். ஆனாலும், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு பாஷைகளிலும் அவருக்கு அபாரமான பயிற்சியும் ஞானமும் ஏற்பட்டிருந்தமையால், மேல் நாட்டுக் கல்வியை மாத்திரம் கற்போரிடம் காணப்படும் குற்றங் குறைபாடுகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. ஒவ்வொருவனுக்கும் தாய் தகப்பன்மார்களே பிரத்தியகr தெய்வமென்ற கொள்கையை அவர் மனப்பூர்வமாகக் கடைப்பிடித்து ஒழுகியவர். அவர் அந்த சமஸ்தானத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்திய சொற்ப காலத்திற்குள், அவரே கலியுக தர்மராஜன் என்று எல்லோரும் கூறி அவரைப் புகழும்படியான என்றும் அழியாப் பெருங்கீர்த்தியை அவர் தேடிக்கொண்டதன்றி, ஏழைகள், தனிகர்கள், வலியவர், எளியவர், துஷ்டர்கள், சிஷ்டர்கள் ஆகிய எல்லோரும் அவரை. மெச்சும்படியாக நடந்து வந்தார். . அந்த உத்தம் புருஷருக்கு வாய்த்திருக்கும் மனையாட்டி யின் குணாதிசயங்கள், ஒவ்வோர் அம்சத்திலும் அவரது குணாதிசயங்களுக்குப் பொருத்தமானவைகளாகவே அமைந் திருந்தன. அந்த அம்மாளுக்கு அப்போது வயது முப்பது