பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 செளந்தர கோகிலம்

ஒன்றுகூட பாக்கிவிடாமல் சோதனை போட்டுப் பார்த்து விட்டார். அவர்கள் இருவரும் காணாமலேயே போய் விட்டார்கள்’ என்றார்.

அதைக் கேட்ட திவான் தமது செவிகளையே நம்பாமல் பேரிடியினால் திடீரென்று தாக்கப்பட்டவர் போலப் பொறிக் கலக்கமடைந்து திக்பிரமைகொண்டு தத்தளித்து அந்த ஸ்திரியை நோக்கி, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே! இரவில் வீட்டில் துரங்கிக் கொண்டிருந்தவர்களான இருவரும் எப்படித் தான் மறைந்து போயிருப்பார்கள்! இவர்களுக்கு விரோதிகள் யாராவது உண்டா? அவர்கள் இரண்டு பேரையும் தூக்கிக் கொண்டு போய் விரோதிகள் எங்கேயாவது மறைத்திருப் பார்களா?” என்றார்.

அந்த ஸ்திரீ, “இவர்களுக்கு விரோதி யாரும் இல்லவே இல்லை. அப்படிச் செய்தது விரோதியாக இருந்தால், அவர்கள் கிழவரை மாத்திரம் உயிரோடு விட்டுப் போவார்களா? அந்தப் பெண்னே தன்னுடைய பிள்ளையை அழைத்துக் கொண்டு எவருடனாவது அக்கரைச் சீமைக்குப் போயிருப்பாளோ என்றே ஊரில் எல்லோரும் சந்தேகங்கொள்ளுகிறார்கள்” என்றாள்.

திவான், “அதைப்பற்றி பெரியவர் தம்முடைய பிள்ளைக்கு எழுதவில்லையா?” என்றார்.

அந்த ஸ்திரீ, தாம் உடனே அப்படி எழுதினால், பிள்ளைக்கு அது நிரம்பவும் கஷ்டமாக இருக்குமென்று நினைத்து மேலும் இரண்டொரு நாள்கள் வரையில் நன்றாகத் தேடிப் பார்த்து, ஒரு வேளை அந்தப் பெண் புருஷனிடமே திரும்பிப்போயிருப்பாளோ என்பதைத் தெரிந்து கொண்டு வர ஒர் ஆளையே திருவனந்தபுரத்துக்கு அனுப்பலாமென்றிருந்தார். மூன்றாவதுநாள் திருவனந்தபுரத்திலிருந்து கிழவருக்கே ஒரு தந்தி வந்தது. அதைக் கண்டவுடன் தம்முடைய மருமகளும் பேரனும் அந்த ஊருக்குத் திரும்பி வந்து விட்டார்கள் என்றுதான் அந்தத் தந்தியில் செய்தி எழுதப்பட்டிருக்குமென்று கிழவரும் மற்றவர் களும் நினைத்து நிரம்பவும் சந்தோஷமடைந்தனர். ஆனால் தந்தியைப் பிரித்துப் பார்த்தவுடன் அவர்கள் எல்லோருடைய சந்தோஷமும் அழுகையாய் மாறிவிட்டது. அதிலிருந்த சங்கதி