பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO2 செளந்தர கோகிலம்

உலகத்தையும் மறந்தாள்: தன்னையும் மறந்தாள். தான் புஷ்பாவதியையும் தன்னோடு அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்பதையும் எண்ணாமல் அந்த மடந்தை ஒரே மூர்க்கமான முகத்தோற்றத்தோடு நேராகத் தனது சயனத் திற்குச்சென்று அதன்மேல் ஏறி உட்கார்ந்து நாற்புறங்களிலும் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு இரண்டு மூன்று தரம் நெடுமூச்செறித்தாள். தனது சுகவாழ்க்கைக்குப் பெருத்த இடையூறாக வந்து தோன்றியுள்ள தனது அக்காளைத் தான் உடனே தண்டிக்க அவள் அப்போது அவ்விடத்தில் இல்லையே என்ற பெருத்த ஏக்கமும் ஏமாற்றமும் தோன்றி அவளது ஆத்திரத்தையும் வேதனையையும் முன்னிலும் பன்மடங்கு பெருக்கின. அவ்வாறு அவள் கட்டிலடங்கா வீராவேசத்தோடு போய்க் கட்டிலின்மீது உட்கார்ந்ததைக்கண்ட புஷ்பாவதி யம்மாள். தானும் கூட இருந்து அவளது மனத்தைத் தங்கள் கருத்திற்கு ஒத்தபடி திருப்ப அதுவே பரிபக்குவமான நிலைமையென்று உணர்ந்து கோகிலாம்பாளது இழிவான செய்கையைக் கேட்டு நிரம்பவும் வெட்கிக் குன்றிப் போனவள் போல நடித்து விசனகரமான முகத்தோடு மெல்லநடந்து செளந்தரவல்லியம்மாள் இருந்த கட்டிலண்டை சென்று அதற்குமுன் உட்கார்ந்திருந்ததுபோல அந்த மடந்தையினருகில் உட்கார்ந்துகொண்டு, வாடித் துவண்டு போன தோற்றத்தோடு சிறிது நேரம் மெளனமாக வீற்றிருந்தபின் மிருதுவான குரலில், ‘செளந்தரா! என்னைப்போல முட்டாள் இந்த உலகத்தில் வேறே யாரும் இருக்கமாட்டாள் என்று நினைக்கிறேன். என் தமயனார் கூப்பிட்டால், நான் போய்ப் பேசாமல், அறியாத குழந்தையான உன்னை அனுப்பி, சந்தோஷமாக இருந்த உன் மனசைக் கெடுத்துப் பாழக்கிவிட்டேன். என் புத்தியைச் செருப்பால் அடித்துக்கொள்ளவேண்டும். அவர் சாதாரணமான சங்கதி எதையாவது பேசுவார் என்று நினைத்து உன்னை அனுப்பினால், அது பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாயிற்று. உனக்கு அதிக சந்தோஷம் உண்டாக்கி உன் மன ஆவலை விலக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு நான் இந்தக் காரியத்தைச் செய்தால், உன் மனசில் இதற்கு முன் இருந்த சந்தோஷமும் உற்சாகமும் பறந்துபோய்விட்டன.