பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 செளந்தர கோகிலம்

திரவேண்டி இருக்கிறதே! ஈசுவரா பரம்பொருளே பரமபுருஷா உன் சிருஷ்டியின் விநோதத்தையும் உன் திருவிளையாடலின் மர்மத்தையும் நான் என்னவென்று சொல்லப்போகிறேன்: என்று இவர் பன்முறை நினைத்து விரக்தியை மேன்மேலும் அதிகரிக்கச் செய்ய முயற்சிப்பார். அவ்வாறு திவான் முதலியார் தாமரை இலைத் தண்ணீர்த் துளிபோல உலகப் பற்றையும், பழைய நினைவுகளையும் ஒழித்தும் ஒழிக்காமலும் இருந்து, தேச யாத்திரை புரிந்து வடதேசங்களிலுள்ள முக்கியமான ஊர்களுக்கு எல்லாம் சென்றார். தாம் தமது ஊரை விட்டுப் புறப்பட்டு எத்தனை நாட்களாயின, எத்தனை மாதங்கள் கழிந்தன, எத்தனை வருஷங்கள் சென்றனவென்ற கணக்கையாவது நினைவையாவது அவர் வைக்காமல் போய்க்கொண்டே இருந்தார். மறுபடி தாம் தென் தேசங்களைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணமும் நமது பிதா rேமமாயிருக்கிறாரா என்பதை நேரில் காண வேண்டுமென்ற வேட்கையும் அவரது மனத்தில் தோன்றி வதைக்கலாயின. ஆகவே, அவர் மறுபடி திரும்பித் தென் திசையில் யாத்திரை செய்யலானார். முன் கூறப்பட்டபடி உலகப் பற்றை உண்மையிலேயே விடுத்த மெய்த்துறவிகளின் சகவாசம் அவருக்கு அடிக்கடி வாய்த்ததானாலும், அவர் தமது விரக்தியினாலும் சாத்விகமான ஆகாராதிகளினாலும், ஊரூராய் அலைந்து திரிவதால் ஏற்பட்ட மெலிவினாலும் அவருக்குப் பஞ்சேந்திரியங்களின் வேட்கை குறைந்துகொண்டே வந்தமை பாலும், அவரது தேவைகள் படிப்படியாய்க் குறைந்துபோயின. ஒரு நாளைக்கு இரண்டு பிடி அன்னமும் நான்கு கையளவு தண்ணிரும் உட்கொண்டால், அதுவே அவருக்கு மறுநாள் அந்த நேரம் வரையில் போதுமானதாக இருந்தது. அந்த ஆகாரம் அவருக்கு அநேகமாய் இலவசமாகவே கொடுக்கப்பட்டுப் போயிற்று. அதுவுமன்றி, ஐந்து ரூபாய் செலவிட்டு இரண்டு ஜதை வஸ்திரங்களும் அங்கிகளும் தைத்துக்கொண்டால், இவைகளே அவருக்கு ஒரு வருஷ காலத்திற்கு வந்தன. ஆதலால், ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்த இரண்டு லக்ஷம் ரூபாயில், அவர் ஒரே ஒர் ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து மாற்றிய பணத்தில் பெரும் பாகமும் மிச்சம் இருந்தது. எவரேனும் கஷ்டதசையில் இருப்பதைக் கண்டால், அவருக்கு