பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 செளந்தர கோகிலம்

பார்க்காமல் யாராவது இல்லை யென்று சொல்வார்களா? அப்படியானால் நான் என் வேலையை அஜாக்கிரதையாகப் பார்க்கிறேனென்று நீர் சொல்லுகிறீரா? எனக்கு நீர் வேலை கற்றுக் கொடுக்கிறீரா? நான் இல்லையென்றால், அது நிச்சயமாக இல்லைதான். நான் நன்றாக ஆராய்ந்து பார்த்துச் சொன்னேன் என்பதே அர்த்தம். தெரிகிறதா? எனக்கு அவசர வேலையிருக் கிறது. சொன்னதையே மறுபடி திருப்பித் திருப்பிச் சொல்ல எனக்கு நேரமில்லை. நீர் போகலாம். அடே போஸ்டு மேன்! ஜன்னல் கதவை மூடு. கொஞ்ச நேரம் கழித்து மறுபடி திறக்கலாம்” என்று நிர்த்தாrணியமாகவும் முன்கோபமாகவும் பேசினார்.

அதைக்கேட்ட திவான் சாமியார் அவமானத்தினால் குன்றிப்போய் அவ்விடத்தைவிட்டு அப்பால் நடந்தார். தாம் வெளியிட்ட முக்கியமான விளம்பரத்திற்கு எவ்வித உத்தரமும் இல்லாமல் போகுமென்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஆதலால், முற்றிலும் பிரதிகூலமான அந்த மறுமொழியைக் கேட்டது அவருக்கு இடி வீழ்ந்தது டோலாய் விட்டது. எப்படியும் தாம் தமது அருந்தவப் புதல்வனைக் காணலாம் என்ற எண்ணம் அவலமாய்ப் போய்விட்டதே என்ற ஏக்கமும், துயரமும், அந்த விபரீதச் செய்தியால் ஏற்பட்ட மன அதிர்ச்சியும் அவரது அறிவைக் கலக்கிச் சித்தப்பிரமை கொண்டவர் போல மாற்றிவிட்டன. “என்ன ஆச்சரியம்! இவர்கள் இருவரும் எங்கே தான் போயிருப்பார்கள் என்பது தெரியவில்லையே! உயிரோடு இருக்கிறார்களா இறந்து போய்விட்டார்களோ என்பதுகூட நிச்சயமாய்த் தெரியவில்லையே; ஒருவேளை இந்த விளம்பரம் அவர்கள் வரையில் எட்டாமல் போயிருக்குமோ? இது பெருத்த விந்தையாக இருக்கிறதே! இனி நான் எப்படித்தான் முயற்சி செய்யப் போகிறேன்! எப்படித்தான் அவனைக் கண்டுபிடித்து இந்தப் பணத்தை அவனிடம் சேர்க்கப் போகிறேன். இனி தற்செயலாய் எவ்விடத்திலாவது நான் அவனைக் காணப் போகிறேன் என்பதை ஒரு நிச்சயமாக வைத்துக்கொண்டு இனியும் நான் இந்தப் பணத்தைத் தூக்கிச் சுமப்பது பலனற்ற தாக முடிந்தாலும் முடியலாம். அவனுக்கு மற்றதெல்லாம் பிராப்தமில்லாது போனதுபோல இதுவும் அவனுக்குப் பிராப்த