பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் i29

தொண்டவர் போலப் பாய்ந்து, “ஐயா! அவரை உடத்திரவிக்க வேண்டாம்! சாகப்போகிற கிழவர் ஐயா! உங்களுக்குப் புண்ணியமுண்டு. அவரை விட்டு விடுங்கள். அவர் இந்த இடத்திலும் இருக்காமல், நான் அவரை ஊர்ச்சாவடிக்கு அழைத்துக்கொண்டு போகிறேன்’ என்று நயந்து இறைஞ்சி நிரம்பவும் உருக்கமாகவும் அன்பாகவும் அவனது கையைப் பிடித்து, “ஐயா! வாருங்கள். நான் உங்களை வசதியான வேறே இடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்ப் படுக்க வைக்கிறேன்” என்று அழைக்க அவ்விடத்தில் நின்ற முரடர்கள் அவ்வளவோடு கிழவனை விட்டுவிட்டுத் தமது வீட்டிற்குப் போயினர். தன்னை அவர்கள் வற்புறுத்தி ஹிம்சித்த சமயத்தில் பரமசிவன் போலத் தோன்றித் தன்னிடம் அன்போடு பேசித் தனக்கு உதவி செய்வதாக ஒரு பரதேசி வந்ததைக் கண்ட கிழவன் அளவற்ற மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்து நமது திவான் சாமியாரைப் பார்த்து, ‘சாமியார் ஐயா! உங்களுக்கு அநந்தகோடி புண்ணியம் உண்டு; நீங்கள் வராவிட்டால் இந்தப் புண்ணியாத்துமாக்கள் என்னை இந்நேரம் சித்திரவதை செய்துவிடுவார்கள். நான் எழுந்து நடந்தால், கிறுகிறுப்பும் மயக்கமும் கீழே தள்ளுகின்றன. என்னைப் பிடித்துக்கொண்டே வந்தால், நான் நடந்து வருகிறேன். மெதுவாய் என்னை இந்த ஊர்ச் சாவடியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்’ என்றான்.

திவான் முதலியார் அப்படியே செய்வதாக இணங்கி, மெதுவாக அவனைத் தூக்கி நிறுத்தி நடத்திக்கொண்டு அந்த ஊர்ச் சாவடி எங்கே இருக்கிறது என்பதை விசாரித்தறிந்து அங்கே போய் வசதியான ஒரிடத்தில் கிழவனைப் படுக்கவைத்து, “ஐயா! நான் போய் ஏதாவது ஆகாரம் கொண்டு வருகிறேன். சாப்பிடுகிறீர்களா?” என்றார்.

உடனே கிழவன் சகிக்க வொண்ணாத ஆநந்தமும் நன்றியறிதலும் காட்டி, ‘சுவாமிகளே! நீங்கள் மகாராஜனாய் என்றும் சிரஞ்சீவியாய் இருக்கவேண்டும். நான் ஐம்புலன்களும் அறிவும் பெற்ற மனிதனாய்ப் பிறந்திருந்தாலும் என்னை சகலமான ஜனங்களும் கேவலம் புழுவைவிட இழிவாக மதித்து, என்னைக் காலால் மிதிக்கக்கூட அருவருப்புக்கொண்டு விலகிப் செ.கோ.11-9