பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 13

உதவியாவது ஏற்படும்படி கடவுள் செய்தாரே! அதுவும் முன் ஜென்ம பூஜாபலன்தான். கலியானப் பெண்ணின் தாயாரும் தகப்பனாரும் நல்ல குணமுடைய மனிதர்கள் தானே’ என்றார்.

அதைக் கேட்ட அந்த ஸ்திரீ, “இதுவரையில் அவர்கள் - ஏழ்மை நிலையிலிருந்தார்கள், நல்லவர்களாக இராமல் வேறு மாதிரியாயிருக்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இப்போது திடீரென்று புதுப்பணம் படைத்தவர்கள் ஆய்விட்டார்களே. இனி எப்படி மாறுவார்களோ பணம் மனிதரை எப்படி வேண்டுமானாலும் செய்துவிடும். என்னவோ பார்க்கலாம். எல்லாம் காலக்கிரமத்தில்தான் தெரியும்’ என்றாள்.

திவான் சாமியார், ‘கலியாணப் பெண்ணின் மாதிரி எப்படி?” என்று நயமாக வினவினார்.

அந்த ஸ்திரீ அதையெல்லாம் இப்போது நாம் எப்படிக் கண்டுபிடித்துச் சொல்லமுடியும்? மனிதர் தமக்கு அதிகாரம் கிடைக்கிறவரையில் அடக்கமாகவும் நயமாகவும்தான் நடந்து கொள்ளுவார்கள். தம்முடைய ஸ்தானம் நிலைத்துப் போய் விட்டது. இனி மற்றவர் தம்மை அசைக்கமுடியாது என்று கண்டு கொண்டால், பிறகு அவர்கள் புதுமாதிரியாகத்தான் நடந்து கொள்ளுவார்கள். இது எல்லா இடத்திலும் பிரத்தியrமாக நடக்கும் சங்கதிதானே’ என்றாள்.

திவான் சாமியார், “ஆம், அம்மா! நீங்கள் சொல்வது சரியான வார்த்தை. ஆனாலும் நான் பயந்து உங்களிடம் இன்னம் ஒரே ஒரு சங்கதி கேட்கிறேன். கோபித்துக் கொள்ளாமல் அதை மாத்திரம் சொல்லிவிடுங்கள். இந்தப் பெரியவர் திருவனந்தபுரத்திலிருந்து வந்த பிறகு நோயாய்ப் படுத்திருந்து தேறினாரல்லவா? அதன்பிறகு இவர்களுக்குள் ரகளிலியமாக நடந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் சொன் னிர்களே, அவைகளையெல்லாம் நீங்கள் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்? யூகத்தின் மேல்தானே?’ என்று விநயமாக வினவினார். ---

அதைக்கேட்ட அந்த ஸ்திரீ, ‘எனக்கு அந்தத் தவசிப் பிள்ளையின் சம்சாரம் பழக்கமானவள். அடிக்கடி அந்த அம்மாள் என்னிடம் வந்து தங்கள் குடும்ப ரகஸியங்களை