பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 155

நண்பரைக் காண்பதுபோல ஒருவித இன்பமும் மனவெழுச்சியும் அவளுக்கு உண்டாயின. சந்தோஷத்தினால் முகமும் மலர்ந்தது. அந்த ஸ்திரீ கதவு நிலைப்பக்கம் போய் ஒதுங்கி நின்றபடி பேசத் தொடங்கி, ‘சாமியார் ஐயா செளக்கியமா! இப்போதுதான் வருகிறீர்களா?” என்று அன்பொழுக வினவினாள்.

அதைக் கேட்டு திடுக்கிட்ட திவான் தமது சுய உணர்வை அடைந்து, கேள்வி கேட்டது இன்னார் என்பதை அறிந்து நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு, “செளக்கியந்தான் தாயே! இப்போதுதான் இந்த ஊருக்குள் நுழைந்து நேராக இங்கே வந்து உட்கார்ந்தேன். நான் எப்போது வந்தாலும், இந்தத் திண்ணை தான் எனக்குத் தாய் வீடுபோல நிழல் கொடுத்து உதவுகிறது. அன்பான குளிர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை ஒவ்வொரு தடவையிலும் விசாரிப்பது நான் எங்கே போனாலும் என் மனசை விட்டு அகல்கிறதே இல்லை. அம்மணி நான் வந்த வழியில் ஓர் ஊரில், நல்ல முதல் தரமான சீமை இலந்தைப் பழங்கள் விற்கப்பட்டன. நான் வந்து வழக்கப்படி இந்தத் திண்ணையில் கொஞ்ச நேரம் தங்கிவிட்டுப் பிறகு போக வேண்டுமென்ற உத்தேசத்தோடு நான் வந்து கொண்டிருந்தேன். ஆகையால், அந்தப் பழங்களைப் பார்த்த காலத்தில் உங்களுடைய நினைவு என் மனசில் உண்டா யிற்று, இந்த ஊரில் அந்தப் பழம் அகப்படுவது அரிது. ஆகையால், நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணங் கொண்டு ஐந்தாறு பழங்களை வாங்கி என் ஜோல்னாப் பையில் போட்டுக் கொண்டு வந்தேன். தாயே! இதை வாங்கிக் கொள்ளுங்கள். நான் இதோடு மூன்று தடவைகள் இங்கே வந்திருக்கிறேன்; உங்களுடைய குடும்பத்திலுள்ள மற்ற மனிதர்கள் யாரையும் பார்த்ததுமில்லை, உங்களுக்குக் குழந்தை குட்டிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளவுமில்லை. நீங்கள் இவ்வளவு அன்பாக என் rேமத்தைக் கேட்கையில் நான் உங்களுடைய குடும்ப rேம லாபங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் போவது கேவலம் அநாகரிகமான செய்கை, அம்மணி தாயே! இந்தப் பழங்களை எடுத்துக் கொண்டு போய் நீங்களும் சாப்பிட்டு, உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுங்கள் என்று கூறிய வண்ணம் தமது மூட்டைக்குள்ளிருந்து ஆறு பெரிய சீமை இலந்தைப் பழங்களை எடுத்து அந்த ஸ்திரீ இருந்த பக்கமாக நகர்த்தி வைத்தார்.