பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 செளந்தர கோகிலம்

மருந்துகள் செய்யத் தெரியும். சில மருந்துகள் கோரோசனை யைக் கொண்டு தயாராக வேண்டும். உன்னிடம் நல்ல கோரோசனை திணிக்கள் இப்போது கைவசத்தில் இருக்குமோ என்று கேட்டு விட்டுப் போகலாமென்று உன்னை வரவழைத்தேன். இருந்தால், கொண்டு வந்து கொடு. உடனே விலை கொடுத்து நான் வாங்கிக் கொள்ளுகிறேன்.

காத்தான் : சாt எந்த மாதிரிக் கோரோசனை ஒனு மானாலும் எங்கிட்ட இருக்குது சாமீ. ஒசத்தியும் இருக்குது; மட்டமும் இருக்குது. ஆனா, அததுக்குத் தக்கின வெலெ குடுத்து வாங்க மவராசரைத்தான் காணுங்க சாமி.

திவான் சாமியார் : ஒகோ அப்படியா எனக்கு நல்ல முதல் தரமான கோரோசனைத்தான் தேவை. நீ என்ன விலை சொல்லுகிறாயோ அதை நான் மறு பேச்சுப் பேசாமல் கொடுத்து விடுகிறேன்.

காத்தான் : நல்லது சாமீ. சந்தோஷம்! இதுவரையிலே இந்த மாதிரி யாரும் சொன்னதில்லிங்க நானு ஊட்டுக்குப் போயி எடுத்தாறட்டுமா? மொதல் தரம் கோரோசனை ஒரு மாட்டுலெ இருந்து எடுத்தது. ஒரு வரான் ஆவுங்க. மட்டம் ஒரு மாட்டுலெ இருந்து எடுத்தது ரெண்டே ரூபாதானுங்க. எது வோணுமா னாலும் எடுத்தாறேன். சொல்லுங்க எத்தினி மாட்டுக் கோரோ சனை ஒணுங்கறத்தியும் சொல்லுங்க.

திவான் சாமியார் : நல்ல முதல் தரமான கோரோசனை இப்போது உன்னிடத்தில் எத்தனை மாட்டிலிருந்து எடுத்தது இருக்கிறது? -

காத்தான் : நாலு மாட்டுக் கோரோசனை இருக்குதுங்க. திவான் சாமியார் : அதையெல்லாம் அப்படியே எடுத்துக் கொண்டுவா - என்றார்.

தன்னிடத்திலிருந்த சரக்கு முழுதையும் அவர் வாங்கிக் கொள்வதாகச் சொன்னதைக் கேட்கவே காத்தான் மிகுந்த மகிழ்ச்சியும் குதூகலமும் அடைந்து விசையாக அந்த இடத்தை விட்டுத் தனது வீட்டிற்குப் போய் ஐந்து நிமிஷ நேரத்துக்குள் கோரோசனையோடு திரும்பி வந்தான். வந்தபொழுது அவன்