பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 15

களிப்பும் ஆநந்தமும் அடையும் தாம் அந்த மாளிகையைப் பார்க்கவும் கொடுத்து வைக்காமல் உடனே புறப்பட்டு அந்த ஊரை விட்டே ஓட நேர்ந்ததே, ஈசுவரா என்ன கொடுமை. இது! திவான் சகிக்க இயலாத பெருத்த ஏக்கமும் வேதனையும் துயரமும் அடைந்தார். தமது மனைவியும், ராஜா பகது.ாரும் எங்கேதான் போயிருப்பார்களென்று அவர் தம்மாலான வரையில் யூகித்து யூகித்துப் பார்த்து தமது மூளையை வதைத்துக்கொண்டதெல்லாம் வீணாகவே முடிந்தது. அந்த விஷயத்தில் அவர் ருஜவான அபிப்பிராயம் எதையும் கொள்ள இயலவில்லை. ஆனாலும், தனக்குப் பாஷாணமிட முயன்ற முத்துசாமி கூறிய வரலாறு ஒருவேளை நிஜமாய்த்தான் இருக்குமோ என்ற சந்தேகம் நிவர்த்தியாக வழியில்லாமல் இருந்ததன்றி, தாம் திருவடமருதூரில் கேள்வியுற்ற விபரீதச் செய்தி அந்தச் சந்தேகத்தை அநேகமாய் ஊர்ஜிதப்படுத்தியது. திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு மாமனார் வீட்டிற்கு வந்த காந்திமதியம்மாள் அதே இரவில் எங்கே போயிருப்பாள்! அவள் திரும்பித் திருவனந்தபுரத்திற்கும் போகவில்லை. வேறு எவ்விடத்திலும் காணப்படவில்லை; அவள்தான் போனாள் என்றால், அவளுடைய சொற்படி ராஜாபகதூர் நடந்துகொள்ள எப்படி இணங்கினான்? ஒருக்கால் அவர்கள் இருவருக்கும் எதிர்பாராத அபாயம் ஏதேனும் நேர்ந்திருக்குமா! அவர்கள் இருவரும் ஆற்றில், கிணற்றில் தவறி விழுந்து தற்செலயாய் இறந்து போயிருப்பார்களா அப்படியிருந்தால் அவர்களுடைய சவம்கூட வெளிப்படாமல் போக ஏதுவில்லையே! பிறகு எப்படித்தான் அவர்கள் மாயமாய் மறைந்து போயிருப்பார்கள்? காந்திமதியம்மாள் தானாக இணங்கியே ரகஸியமாய்ப் புறப் பட்டு இரவோடிரவாய் எங்கேயாவது போயிருந்தாலன்றி இப்படி யாதொரு கேடுமின்றி திடீரென்று மறைந்துபோக சாத்தியப்பட்டிருக்காது. அவள் போவதற்கு முன்னாகவே, ராஜாபகதூரையும் அவள் சரிப்படுத்தி, அவன் தனது விருப்பத்திற்கு இணங்கும்படி செய்திருந்தாலன்றி, அவனும் இவ்வாறு திடீரென்று மறைந்து போயிருப்பதும் சாத்தியமற்ற விஷயம். ஆகவே, காந்திமதியம்மாளைப்பற்றி முத்துசாமி கூறிய தகவல் உண்மையாகவே இருக்கவேண்டும். அவள் தனது