பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 செளந்தர கோகிலம்

அவர் உடனே அவ்விடத்தைவிட்டு வெளியில் போய், ஒரு டலாயத்தைக் கீழே அனுப்பி, கலெக்டர் கூறியபடி ஒருவரை அழைத்து வரச் செய்து அவரை ஜன்னலுக்கு வெளியில் நிற்கச் செய்தார். அவ்வாறு நின்றவர் ஜன்னலின் வழியாகப் பார்த்ததில், உட்புறத்தில் தட்டி மாத்திரம் தெரிந்ததேயன்றி, அதற்கப்பால் மனிதர் இருந்தனர் என்பது தெரியவில்லை. கலெக்டர் தட்டியில் விடப்பட்டிருந்த துளையின் வழியாக வெளியில் பார்த்து, ஜன்னலுக்கு அப்பால் ஒரு மனிதர் வந்து நின்றதை உணர்ந்து, குஞ்சிதயாத முதலியாரை நோக்கி, “ஐயா! முதலியாரே! இந்த தட்டியில் இருக்கும் துவாரத்தண்டை உங்களுடைய முகத்தை வைத்துக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே நிற்கும் மனிதரைப் பாருங்கள்’ என்றார்.

உடனே குஞ்சிதபாத முதலியார் அவ்வாறே செய்தார். கலக்டர் : அங்கே நிற்பவர் யாரென்று அடையாளம் உங்களுக்குத் தெரிகிறதா?

குஞ்சிதயாத முதலியார் : தெரிகிறது. இவர் எங்களுடைய ஊர் கிராம முனிசீப்.

கலெக்டர் : இவருடைய பெயர் என்ன?

குஞ்சிதயாத முதலியார் : முத்தப்பா முதலியார் கலெக்டர் : தகப்பனார் பெயர்? குஞ்சிதயாத முதலியார் : கைலாச முதலியார். கலெக்டர் : இவருக்குக் குழந்தைகள் எத்தனை? நிலம் முதலியவை எவ்வளவு? இவரைப்பற்றி உங்களுக்குத் தெரிந்த விவரங்களை எல்லாம் சொல்லுங்கள்.

குஞ்சிதபாத முதலியார் : இந்த இரண்டு வருஷ காலமாய் நான் அந்த ஊருக்குள்ளேயே போனதில்லை. அதற்கு முந்தி இருந்த நிலைமையைத்தான் நான் சொல்ல முடியும். அப்போது இவருடைய சம்சாரம் தவறிப் போய்விட்டாள். இவர் மறுபடி கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. மூத்த சம்சாரத்திற்குக் குழந்தைகள் இல்லை. இவருடைய வீட்டில் விருத்தாப்பிய தசையிலிருந்த தாய்