பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் iS3

எழுந்திருக்க மாட்டாமல், உட்கார்ந்தபடியே நகர்ந்து கொண்டி ருக்கும்; இப்பொழுது ஒருவேளை எழுந்து நடக்கிறதோ என்னவோ. பெண்களில் மூன்று குழந்தைகளாக இருந்தனர். இவருக்கு நிலம் அதிகமாக இல்லை. ஊர்க் கோடியில் சுடுகாட் டுக்குப் பக்கத்தில் இவருக்குப் புஞ்சை நிலம் இரண்டு வேலி இருந்தது. அதில் இவர் செளக்கு மரம் வைத்துப் பயிர் செய்தி ருந்தார். இவருக்குச் சர்க்காரில் பத்து ரூபாய் சம்பளம், அது தவிர மிராசுதார்கள் ஒரு வேலி நிலத்துக்கு ஒரு கள நெல் வீதம் இவருக்கு வருஷவாரி இனாம் கொடுக்கிறது வழக்கம். அவைகளை வைத்துக் கொண்டுதான் இவர் ஜீவனம் செய்கிறது. இவர் நிரம்பவும் பயந்த சுபாவமுடையவர். அதிகமான மோசம்புரட்டு முதலிய விஷயங்கள் எதிலும் இறங்குவதில்லை. இவர் பத்திரம் முதலிய தஸ்தாவேஜுகள் எழுதுவதில் நிரம்பவும் கைதேர்ந்தவர். அதிலும் இவருக்கு அடிக்கடி ஏதாவது வருமானம் கிடைக்கும்” என்றார்.

உடனே கலெக்டர், “சரி; இவருக்கும் உங்களுக்கும் மாத்திரம் தெரிந்த ரகளிய சங்கதி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்றார்.

குஞ்சிதபாத முதலியார் சிறிது நேரம் யோசனை செய்து ஞாபகப்படுத்திப் பார்த்து, “ஆம், இருக்கிறது. கடைசியாக எனக்குத் தகனம் நடந்ததல்லவா. அதற்குச் சுமார் இரண்டு மாச காலத்திலிருந்தே என் உடம்பு சரியான நிலைமையில் இல்லை. எனக்கு அடிக்கடி மார்படைப்பும் மயக்கமும் வருவது வழக்கமாக இருந்தது. நான் ஒரு வேளை சீக்கிரமாக இறந்து போய் விடுவேனோ என்ற எண்ணம் என் மனசில் தோன்றியது. நான் இவரை ரகளிலியமாக ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு வரவழைத்துத் தனியாக என் வீட்டு மேன்மாடத்திலுள்ள ஒர் அறைக்குள் வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் இவரிடத்தில் என்னுடைய உடம்பின் கேவல நிலைமையைத் தெரிவித்ததன்றி, எனக்கு இன்னின்ன சொத்துக்கள் இருக்கின்றன வென்றும், அவைகளைத் தான தருமங்களுக்கும் கோவிலுக்கும் மற்றுமுள்ள என் மனைவி முதலியோருக்கும். இன்னின்ன விதமாகப் பங்கிட்டுக் கொடுக்க உத்தேசிக்கிறேன் என்றும் சொல்லி, அப்படியே ஒர் உயில் தயாரித்துக் கொண்டு வரும்படி செ.கோ.Hi-13