பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 201

நெருப்பில் போட்டுக் கொளுத்திவிடாமல் ஏன் வந்தாயென்று இவனைக் கேட்டனவாம். “நான் இறந்துபோன பிணங்களைச் நடுவேனேயன்றி, உயிருடன் இருக்கும் மனிதர்களைக் கொல்ல, நான் கொலைகாரனல்ல"வென்று இந்த உத்தம குணப் புருஷன் அந்த மிருகங்களுக்கு நீதி போதித்தானாம். எஜமானே! இந்தக் காத்தானைப் பார்க்கும்போது, முன் காலத்திலிருந்த நந்தனார் முதலிய தெய்வாம்சம் பொருந்திய மகான்களின் நினைவு உண்டாகிறது. இப்போது என் மனசில் உண்டாகும் ஆனந்தப் பெருக்கில் நான் ஒடி இந்த மனிதனைக் கட்டி ஆலிங்கனம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஒரு வேட்கையும் ஆவலும் எழுந்து துடிக்கின்றன. நான் என் ஆயிசுக்குள் இந்தப் புண்ணிய புருஷனை மறுபடி காணப்போகிறேனாவென்று எண்ணிப் பதறிக் கொண்டிருந்தேன். அந்த ஆசை இப்போதுதான் தங்கள் தயவினால் பூர்த்தியாகிறது. எஜமானே! இந்த மனிதனோடு தனிமையில் நான் கொஞ்ச நேரமாவது பேசவேண்டுமென்று என் மனம் நிரம்பவும் தாகப்படுகிறது. அதற்குத் தாங்கள் அநுமதி கொடுக்கலாமா?’ என்று நிரம்பவும் இறைஞ்சி வேண்டிக் கொண்டார். அதைக்கேட்ட கலெக்டர் உடனே காத்தானை உள்ளே அழைத்துவரும்படி சிரஸ்ததாரை அனுப்பி வைத்தார். குஞ்சிதபாத முதலியார் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த வர்களான கிராம முனிசீப் முதலிய கனவான்கள் குஞ்சிதபாத முதலியார் பிழைத்துக் கொண்ட வரலாற்றை அப்பொழுதுதான் ஒருவாறு தெரிந்துகொண்டு, அதைக் குறித்து அளவற்ற வியப்பும், பிரமிப்பும், ஆனந்தமுமடைந்து ஒருவரிடத்தொருவர் ரகசியமாகப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டனர். கலெக்டர் குஞ்சிதபாத முதலியாரை மாத்திரம் முன்போல அறைக்குள் போய் இருக்கும்படி செய்து, மற்ற கனவான்களை அவர்களிருந்த அறைக்குள்ளிருந்து வரவழைத்து அந்தக் கூடத்திலேயே ஒரு பக்கமாக நின்று கொண்டிருக்கும்படி செய்துவிட்டு காத்தானு டைய வருகையை எதிர்பார்த்திருந்தார். -

திருவடமருதூரிலிருந்து வந்திருந்த எல்லோரிலும் காத்தானே நிரம்பவும் பயந்த சுபாவமுடையவன். அவன் தனது சேரியை விட்டு ஊருக்குள்ளே இருக்கும் மிராசுதார்களிடம் வருவதென்றாலே பயந்து நடுங்கிப் பதுங்கி ஒதுங்கி அரை