பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 செளந்தர கோகிலம்

அதைக்கேட்ட கலெக்டர், ‘ஓகோ அப்படியா! இவர்களிடம் நீ அதைக் கேட்கக் கூடாதா! இருக்கட்டும். இதோ பக்கத்து அறையில் உள்ள ஊர் மனிதர் இன்னொருவர் இருக்கிறார். அவரைக் கூப்பிடுகிறேன்; அவர் அவ்வளவு பெருமை பாராட்டு கிறவர் அல்ல. ஆகையால், அவரிடம் நீ கேட்டால், உனக்குத் தக்க உத்தரம் சொல்லுவார் என்று கூறிய வண்ணம் குஞ்சிதயாத முதலியார் இருந்த அறைப் பக்கம் திரும்பி, ‘ஐயா! வாருங்கள் வெளியில்” என்றார்.

அடுத்த நிமிஷம் குஞ்சிதபாத முதலியார் அறைக்குள்ளிருந்து கூடத்திருந்து வந்து சேர்ந்தார். வந்தவர் எதிரில் நின்ற காத்தானைப் பார்த்தார். அவனும் நிமிர்ந்து அவர் யாரென்று பார்த்தான். பார்க்கவே, திடீரென்று பிரம்மாண்டமான ஒரு ஜோதி மனிதரது கண்ணில் வந்து தாக்கினால், அவர்கள் எவ்வாறு பிரமித்து திடுக்கிட்டு மதிமயங்கி நிற்பார்களோ அவ்வாறு காத்தான் தனது கண்களையே நம்பாமல் பிரமித்து ஸ்தம்பித்து ஒரு நிமிஷ நேரம் அப்படியே நின்றுவிட்டான். அடுத்த நிமிஷம் அவனது உடம்பு மின்சார சக்தியால் ஊக்கப் பட்டதுபோல அளவற்ற உற்சாகமும் கட்டிலடங்கா ஆவேசமும் கொண்டது. தான் பெரிய கலெக்டரின் கச்சேரியில் அவருக் கெதிரில் நின்றதையும் அவன் மறந்தான், தன்னையும் மறந்தான், மற்றவர் நின்றதையும் மறந்துபோய் சன்னதங் கொண்டவன் போல வாய்விட்டுப் பெருங்கூச்சல் செய்து, ‘ஆ! சாமீ! எங்கப்பா! நீயா இங்கிட்ட வந்திருக்கறே! என் ராசாவே! ஒங்களெ மறுதரம் இந்த ஜென்மத்துலெ காணப் போறேனான்னு, ஏங்கிக் கெடந் தேண்டாயப்பா என் தொரையே! அன்னக்கி ராவுலே நம்ப ஊரு மசானத்துலெ ஒங்களை உட்டுப் பிரிஞ்ச மொதக்கொண்டு இன்னவரையிலே ராவாப்பவலா ஒங்க நெனெப்பே நெனப்பா இருக்கிறேனுங்க சாமீ. ஒங்க குடியும் குடித்தனமும் இருந்த இருப்பென்ன! ஒங்க செல்வமென்ன! செல்வாக்கென்ன! அப்பிடிப்பட்ட கர்ன மவராசனோடெ ராச்சியம் இருந்த எடந் தெரியாமெப் போயிடுச்சே! நீங்க எல்லாத்தியும் தோத்துப்புட்டு அரிச்சந்திர மவராசன், நள மவராசன், தர்மராசனெப் பெலே, பரதேசியாய்ப் போயிட்டீங்களே! ஐயா யப்பா இந்த வவுத் தெரிச்சுக் கொடுமையெ என்னான்னு சொல்லப் போறேன் என்