பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 209

உடனே கலெக்டர் திருவடமருதூருக்கு சம்பந்தப்பட்ட சப்ரிஜிஸ்டிரார் கச்சேரியிலிருந்து முன்னரே தருவிக்கப்பட்டிருந்த குஞ்சிதபாத முதலியாரது பழைய ரேகைக் குறிகள் அடங்கிய புஸ்தகத்தையும், அப்போது எடுக்கப்பட்ட ரேகைகள் அடங்கிய காகிதங்களையும் சர்க்கார் ரேகை பரிசோதக உத்தியோகஸ்தரிடம் அனுப்பி வைக்க, அவர் அவைகளை நிரம்பவும் ஜாக்கிரதையாக ஆராய்ச்சி செய்து பார்த்து அவைகள் எல்லாம் ஒரே விரலின் ரேகைக் குறிகள்தாம் என்று உறுதிமொழி எழுதி அனுப்பி வைத்தார். அதையும், மற்ற விசாரணை விவரங்கள் அடங்கிய காகிதங்களையும் கலெக்டர் உடனே சென்னை துரைத் தனத் தாருக்கு அனுப்பி வைத்தார். குஞ்சிதபாத முதலியாரால் எழுதப் பட்டிருக்கும் மனு முற்றிலும் உண்மையானதென்றும், அவர் செய்து கொண்டிருக்கும் வேண்டுகோள்கள் நியாயமானவை யென்றும், அதன்படியே துரைத்தனத்தார் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் தாம் பலமாய்ச் சிபாரிசு செய்வதாகவும் கண்டு கலெக்டர் ஒரு கடிதமும் எழுதியனுப்பிக் கொண்டார்.

அதன்பிறகு ஒரு வார காலம் கழிந்தது. சென்னை துரைத் தனத்தாரிடத்திலிருந்து உத்தரவு கிடைத்துவிட்டது. குஞ்சிதபாத முதலியாரது மனுவின் கோரிக்கைகள் முற்றிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதோடு, அவருக்குத் தேவையான போலீஸ் உதவிகளையும் தஞ்சை ஜில்லா கலெக்டர் செய்து கொடுக்க வேண்டு மென்றும் துரைத் தனத்தார் உத்தரவு பிறப்பித்திருந்தனர். அந்த உத்தரவின் பிரதிவொன்றை சென்னை துரைத்தனத்தார் தபால் மூலமாக நேரில் குஞ்சிதபாத முதலியாருக்கே அனுப்பி வைத்தனர். அதைப் படித்த திவான் முதலியாரும் அவரது தந்தையும் அளவற்ற களிப்பும் குதூகலமும் அடைந்தனர். முக்கியமாகத் தஞ்சை ஜில்லா கலெக்டர் தமது தந்தையின் மனு விசாரணை காலத்தில் காட்டிய அன்பையும், மரியாதையையும், புத்திசாலித் தனத்தையும் அறிந்து, அதுபற்றி அளவளாவி இருந்த தருணத்தில், சென்னை துரைத் தனத்தாரின் உத்தரவு கிடைத்த மையால், தாம் எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியிலும் அவமானத்திலும் முடியாமல் வெற்றியாயும் பூஜிதையாயும் தாம் நினைத்தபடியும் முடிவுற்றதை எண்ணி உவகை பூத்து உள்ளங் குளிர்ந்ததன்றி, அன்றைய தினம் சுமார் பதினாயிரம் ரூபாய் செ.கோ.iti-14