பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 செளந்தர.கோகிலம்

வேலைக்காரர்கள் செளந்தரவல்லிக்கு முதன்மை கொடுத்தே எந்த வேலையையும் செய்கிறார்களென்பது பூஞ்சோலை அம்மாளுக்கும் கோகிலாம்பாளுக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், அவளிடம் அவர்களிருவரும் கொண்டிருந்த அபார மான வாஞ்சையினாலும், மதிப்பினாலும், அவளது மனம் கோணாதபடி வேலைக்காரர்கள் நடந்து கொள்ளுமாறு விடுத்திருந்தனர்.

ஆகவே, செளந்தரவல்லியம்மாள், எள் என்பதற்கு முன் வேலைக்காரர்கள் எந்த நேரத்திலும் எண்ணெயாகவே, அவளது விருப்பத்தை நிறைவேற்றி, அவள் காலால் இடுவதைத் தலையாற் செய்து வந்தனர்.

அதுவன்றி, மேலே குறிக்கப்பட்ட தினத்தன்று அவள் தனியாக இருந்தமையால், அவளது உத்தரவுகளை ஒரு சக்கரவர்த்தினியின் ஆக்ஞையைப்போல, வேலைக்காரர் வெகு பயபக்தி சிரத்தையுடன் உடனுக்குடன் நிறைவேற்றியபடி, கைகட்டி வாய்பொத்தி அவள் இருந்த இடத்திற்குப் பக்கத்தி லேயே எப்பொழுதும் ஆயத்தமாக நின்று கொண்டிருந்தனர். அவள் முன் கூறப்பட்டுள்ளபடி, மூன்று நான்கு வேலைக்காரர் களைத் தமது உறவினர்களது வீடுகளுக்கெல்லாம் விரைவாகப் போய் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு வரும்படி செய்ததன்றி, டெலிபோன் எந்திரம் எந்தெந்த உறவினரது மாளிகைகளில் இருந்ததோ, அந்த மாளிகைகளிலிருந்தோருக்கு அந்த யந்திரத்தின் மூலமாகவும் செய்தியனுப்பி வைத்தாள். அதுவன்றி, கோகிலாம் பாள் மைலாப்பூரில் சுந்தரமூர்த்தி முதலியாரது பங்களாவில் இருக்கிறாளென்ற செய்தியைத் தனது தாய் வந்தவுடன் அவளி டம் வெளியிடக் கூடாது என்ற நினைவைக் கொண்ட வளாய், செளந்தரவல்லியம்மாள் அந்தச் செய்தியை எந்த வேலைக்கார ருக்கும் தெரிவியாமல் தனக்குள்ளாகவே வைத்திருந்தாள்.

மைலாப்பூரிலிருந்த சுந்தரமூர்த்தி முதலியார் கோகிலாம்பாள் தமது பங்களாவில் இருக்கிறாள் என்ற செய்தியைத் தாம் தமது தங்கைக்கு அறிவித்திருப்பதாகக் கோகிலாம்பாளிடம் கூறினார் அல்லவா, அவ்வாறு தாம் அவளிடம் கூறியிருப்பதாக, அவர் புஷ்பாவதிக்கும் தெரிவித்தார். ஆதலால், பூஞ்சோலையம்மாள்