பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 219

சமாதானம் கூறுகிறது என்ற கவலை இன்னொரு புறத்தில் அந்த அம்மாளினது மனத்தைக் கலக்கி நிலை தடுமாறிப் டைத்தியங் கொள்ளச் செய்து கொண்டிருந்தது. அந்த இரவில் தாம் வேறு எங்கும் போய் அவளைத் தேடவும் மாட்டாமல், அந்தப் பரம வேதனையான நிலைமையைச் சகித்துக் கொண்டிருக்கவும் மாட்டாமல் பூஞ்சோலையம்மாள் தன்னையும் உலகையும் மறந்து நடைப்பிணம்போல வந்து தனது பங்களாவிற்குள் புகுந்து ஸ்திரீகளின் மகாலுக்குள் நுழைந்தாள். அவ்விடத்தில் ஒரு பக்கத்தில் சுமார் பதினேழு பதினெட்டு வேலைக்காரர்களும், இன்னொரு புறத்தில் செளந்தர வல்லியம்மாளும் மிகுந்த கவலையும் கலக்கமும் தோற்றுவித்தவராய் இருந்தனர். பூஞ் சோலையம்மாளைக் கண்டவுடனே செளந்தரவல்லி, ‘அம்மா! வந்தீர்களா!’ என்று ஆவலோடு பதறிக் கதறிய வண்ணம் குபிரென்று எழுந்து தனது தாயினிடம் ஒடி வந்தாள். அது போலவே, மற்ற வேலைக்காரர்களும் மிகுந்த மனவெழுச்சியோடு சரேலென்று எழுந்து, ‘அம்மா! பெரிய குழந்தை அகப்பட்டதா?” என்று ஆவலாய்க் கேட்டபடி வந்து நெருங்கினர். பூஞ்சோலை யம்மாள் திரும்பி வந்த காலத்தில் ஒருக்கால் கோகிலாம்பாள் தனக்கு முன்னால் பங்களாவிற்கு வந்திருந்தாலும் இருக்கலாம் என்ற ஒருவித நம்பிக்கையும் சந்தேகமும் கொண்டு வந்தாள். வேலைக்காரர்கள் அந்த அம்மாளிடம் கேட்ட கேள்வியிலிருந்து அந்த அற்ப நம்பிக்கையும் இல்லாமல் போகவே, சகிக்க வொண்ணாத துயரமும் வேதனையும் எழுந்து முன்னிலும் பலமாகக் கப்பிக் கொண்டன. அந்த அம்மாளது மனதும் தேகமும் நிலைகொள்ளாமலும், கட்டிலடங்காமலும் தத்தளித்துத் தள்ளாடியது. ஆதலால், அவள் அதிதூரம் நடந்து போக ஆற்றாத வளாய் எதிரில் இருந்த ஒரு வெல்வெட்டு ஸோபாவின் மேல், “உஸ்! அப்பா வென்று கூறியபடி அலுத்துத் தளர்ந்து முற்றிலும் ஒய்ந்து வேரற்று வாடிப்போன கொடிபோலத் துவண்டு அப்படியே சாய்ந்துவிட்டாள்.

தாங்கள் கேட்ட கேள்விக்குத் தங்கள் எஜமானியம்மாள் எவ்வித உத்தரமும் கூறாமல் களைத்துப் போய்த் தளர்ந்து சாய்ந்து விட்டதைக் கண்ட வேலைக்காரர்கள் வெளியில் ஏதோ விபரீதமான காரியம் நிகழ்ந்திருக்க வேண்டுமென்றும்,