பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தர கோகிலம்

2

2

2

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் தான் என்ன செய்வது அல்லது என்ன சொல்வது என்பதை அறியாமல் முற்றிலும் தவித்துச் சிறிது நேரம் மெளனமாக இருந்த பின்னர், “கண்ணுர செளந்தரா இப்பேர்ப்பட்ட தொந்தரவான சந்தர்ப்பத்தில், எனக்கு இவ்வளவு தூரம் உபசார வார்த்தை சொல்ல வேண்டுமென்ற ஆசையும் உணர்ச்சியும் உன் மனசில் உண்டானதைக் காண, எனக்கு நிரம்பவும் சந்தோஷம் உதிக்கிறது. குழந்தாய்! எனக்குப் பசி தாகம் முதலிய உபத்திரவம் எதுவுமில்லை. இரண்டொரு நாளாய் ஏற்பட்டுக் கொண்டே போகும் மனவேதனையைத் தாங்க முடியாத அலுப்பே தவிர வேறொன்றுமில்லை. நான் கொஞ்சநேரம் நிம்மதியாகப் படுத்திருந்தால், அதுதான் எனக்கு நிரம்பவும் ஹிதமாக இருக்கும். ஆனாலும், உங்களுக்கு விஷயம் தெரியாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறதென்று நீ சொல்லு கிறபடியால், நான் பேசாமல் இருப்பதும் சரியல்ல. அம்மா! நம்முடைய கோகிலாவைக் காலையில் ஒரிடத்துக்கு நான் அவசரமாக அனுப்பி வைத்தேனல்லவா. அவள் மத்தியானத்துக்குள் எப்படியும் திரும்பி இங்கே வந்திருக்க வேண்டும்; வரவில்லை. ஆகையால், நான் அவளைத் தேடிக் கொண்டு அவள் போன இடத்துக்குப் போனேன். அவள் அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்தபின் புறப்பட்டு இங்கே வந்துவிட்டதாக அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அவள் இதுவரையில் இங்கே வர வில்லை. அவள் வந்தபோது நம்முடைய சொந்தக்காரர் யாராவது கண்டு, தம்முடைய வீட்டுக்கு வந்துவிட்டுப் போகும்படி சொல்லிக் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு போயிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை. நானும் நம்முடைய உறவினர்களான இரண்டொருவருடைய வீடு களுக்குப் போய்ப் பார்த்து விட்டு வந்தேன். அவள் அகப்பட வில்லை. ஒருவேளை அவள் எனக்கு முன்னால் இங்கே வந்திருப் பாளோவென்று எண்ணிக் கொண்டே வந்தேன். வந்தவுடன் நீங்கள் கேட்ட முதல் கேள்வியே அவள் இங்கே வரவில்லை யென்ற அர்த்தத்தைக் கொடுத்துவிட்டது. ஆகையால், என்னு டைய சோர்வு அதிகமாய்விட்டது” என்றாள்.

அதைக்கேட்ட செளந்தரவல்லியம்மாள், “அதெப்படியம்மா! நடுவழியில் எவர்களாவது கண்டு தங்களுடைய வீட்டுக்கு