பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 229

ராயபுரம் பொன்னுரங்க முதலியாருக்கு மாத்திரம் நான் ஆள் அனுப்பவில்லை. அவரைப் பற்றிய ஞாபகம் எனக்கு உண்டாக வில்லை. ஆகையால் நான் அவர்களுடைய வீட்டுக்கு மாத்திரம் ஆளை அனுப்பவில்லை,” என்றாள்.

அந்தச் செய்தியைக் கேட்ட பூஞ்சோலையம்மாள் நிரம்பவும் திடுக்கிட்டு நடுநடுங்கிப் போனாள். ஆனாலும், செளந்தரவல்லி பொன்னுரங்க முதலியாரது வீட்டிற்கு ஆள் அனுப்பவில்லை யென்ற விஷயம் அந்த அம்மாளுக்கு ஒருவித ஆறுதலையும் மனோதிடத்தையும் உண்டாக்கியது. ஆயினும் கோகிலாம்பாள் தனியாக அனுப்பப்பட்ட விஷயத்தை தமது பந்துக்களுக்குத் தெரிவிக்க நேருமே என்றும், அவர்கள் அதைப்பற்றிப் பின்னால் ஏதேனும் வம்பு பேசுவார்களோவென்றும் பூஞ்சோலையம்மாள் பெரிதும் கவலையுற்று, செளந்தர வல்லியம்மாள் அவ்வளவு தூரம் செய்தி சொல்லி அனுப்பி இருக்க, அதை அப்போது தான் எப்படி மாற்றுவது என்று நினைத்து நினைத்துப் பார்த்தாள். எவ்வித யுக்தியும் தோன்றவில்லை. அவ்வாறு அந்த அம்மாள் தவித்துத் தத்தளித்து மெளனத்தில் ஆழ்ந்திருக்க, செளந்தரவல்லி யம்மாள் உடனே வேலைக்காரனைப் பார்த்து, ‘வந்த ஜனங்கள் வெளியில் காத்திருப்பார்கள். நீ உடனே போய் எல்லோரையும் இங்கே அழைத்துக் கொண்டு வந்து சேர், மற்ற வேலைக்காரர்கள் எல்லோரும் இப்படியே இருங்கள். எங்கேயும் போய்விட வேண்டாம் வருகிறவர்களுக்கு நாற்காலிகள் போட்டு உபசரிக்க வேண்டியிருக்கும்” என்றாள். முன் குறிக்கப்பட்ட வேலைக்காரன் உடனே வெளியில் போய் விட்டான். மற்றவர்கள் அவ்விடத் திலேயே கும்பலாக நின்றனர். பூஞ்சோலையம்மாளினது நிலைமை சிறிதும் சகிக்க வொண்ணாததாக இருந்தது. தாம் ரகஸியத்தில் செய்த தவறான காரியம் அத்தனை ஜனங்களுக்கும் தெரிந்து போய்விடுமே என்றும், தங்களுக்கு அதனால் பழிப்பும் அவமானமும் உண்டாகி விடுமே என்றும் நினைத்துக் கலங்கி வேதனையுற்றவளாய்த் தனது கண்களை மூடியபடி பூஞ்சோலை யம்மாள் ஸோபாவில் சாய்ந்திருந்தாள்.

ஐந்து நிமிஷநேரம் கழிந்தது. உறவினர்கள் எல்லோரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னி கம்பெனி துபாஷ் சம்பந்த முதலியார், அவருடைய மனைவி, அக்கவுண்டண்ட் ஜெனரல்