பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 செளந்தர கோகிலம்

உடனே ஞானசாகர முதலியார், “அவர் எந்த ரகஸியத்தை யாவது சொல்லியிருக்கட்டும். அதையெல்லாம் நாம் இப்போது கேட்டது சரியல்ல. இன்றைக்கில்லா விட்டாலும் அவரை நாம் நாளைய தினமாவது சந்திப்போம்; அப்பொழுது இந்த நியாயத்தை நேருக்கு நேர் கேட்போம். அது இருக்கட்டும். பெண் காணாமல் போயிருப்பதாக நாம் முதலில் போலீசாருக்கு அறிவிக்க வேண்டுமே. பெரிய அம்மாள் தேடிப் பார்த்து வந்த சமயத்தில், போலீஸ் ஸ்டேஷனில் எழுதி வைத்தார்களா இல்லையா என்பது தெரிய வேண்டும். இல்லாவிட்டால், இப்போதாவது நாம் போய்ச் சொல்லிவிட்டு வரவேண்டும்” என்றார்.

அதைக் கேட்ட செளந்தரவல்லியம்மாள் உடனே தனது தாயண்டை ஒடி, “ஏனம்மா! நீங்கள் ராயபுரத்திலுள்ள அவர்கள் வீட்டுக்குப் போய்விட்டு வேறு எங்கெங்கோ போய்த் தேடியதாகச் சொன்னர்களே! இதைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனில் எழுதி வைத்தீர்களா?” என்றாள்.

பூஞ்சோலையம்மாள் அந்தக் கேள்விக்கு மறுமொழி கூற மாட்டாது விழித்துத் தத்தளிக்கலானாள். சிறிதும் சம்பந்தப்படாத வரான பொன்னுரங்க முதலியாரைப்பற்றி தான் அபாண்டமான செய்தியைச் சொல்லியதிலிருந்து தங்கள் உறவினர்கள் எல்லோரும் அவர் மீது ஆத்திரப்பட்டு அவரைத் துளவித்ததைக் கேட்க அந்த அம்மாளது மனம் பல வகையில் வேதனையடைந்து தவித்தது. தங்களது ஜனங்கள் பொன்னுரங்க முதலியாரைக் கண்டு. அதைப்பற்றி விசாரித்தால், அவர் எல்லாவற்றையும் அவசியம் மறுத்து தமக்கு எந்தச் சங்கதியும் தெரியாதென்றும், தமது வீட்டிற்கு யாரும் வரவில்லையென்றும் சொல்வது நிச்சயம் ஆதலால், அப்பொழுது தனது நிலைமை சகிக்க வொண்ணாமல் ஆய்விடுமே என்ற எண்ணம் அப்பொழுதே தோன்றிப் பூஞ்சோலை யம்மாளை வதைக்கலாயிற்று. அதுவுமன்றி தான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனதாகச் சொல்வதா, போகவில்லை என்று சொல்வதா என்பதையும் நிச்சயிக்க மாட்டாதவளாய், கல்சிலை போல் அப்படியே சிறிது நேரம் ஒய்ந்து நின்றுவிட்டாள்; தான் போலீஸ் ஸ்டேஷனில் பதிய வைத்து விட்டதாகச் சொன்னால், எந்தப் போலீஸ் ஸ்டேஷனில் பதிய வைத்தது என்ற கேள்வி