பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 239

திக்பிரமை கொண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார். இரண்டொரு நிமிஷ நேரம் வரையில் அவரது குன்றிய தேகம் குன்றியபடியே இருந்துவிட்டது. ஆயினும், அவர் நிரம்பவும் தைரியசாலியாதலாலும், தாம் எவ்விதமான தவறும் செய்யாது இருக்கையில் அவர்கள் தம்மிடம் அவ்வாறு தாறுமாறாக நடந்து கொள்ள வேண்டிய காரணமென்னவென்பதை அறிய வேண்டு மென்று அவரது மனம் பதறியது. ஆகையாலும், அவர் கம்பீரமாக நிமிர்ந்து அங்கிருந்தோரைப் பார்த்து, “என்ன விபரீதம் இது? பெண் எங்கேயென்று என்னிடம் கேட்கிறீர்கள்! பெண்ணை நான் கொன்று விட்டதாகச் சொல்லி என்னை வைகிறீர்கள் என்ன அடாப்பழி ஐயா இது கொஞ்ச நேரத்துக்கு முன் யாரோ ஒர் ஆள் வந்து கோகிலா இன்று காலையில் வீட்டைவிட்டு எங்கேயோ போனது திரும்பி வரவில்லை யென்றும், அதைத் தேடிக்கொண்டு போன பெரிய அம்மாளையும் வெகு நாழிகையாகக் காணோ மென்றும் சொன்னான். அந்தச் சமயத்தில் நான் சாப்பாட்டுக்கு இலையண்டை உட்காரப் போனேன். இந்தச் செய்தியைக் கேட்டவுடன், பரிமாறப்பட்டிருந்த இலையை அப்படியே போட்டுவிட்டு, நானும் என் சம்சாரமும் புறப்பட்டு மோட்டார் வண்டியில் இங்கே வந்திருக்கிறோம். என்னைப் பார்த்து, ‘பெண் எங்கே’’ என்றால், எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! எல்லோரும் பதறாமல் விஷயத்தைச் சொல்லுங்கள். இவ்விடத்தில் என்ன நடந்தது, கோகிலா எங்கே போயிற்று, எப்பொழுது போயிற்று, பெரியம்மாள் எங்கே போனார்கள்; அவர்கள் வந்தார்களா இல்லையா, என்மேல் நீங்கள் என்ன காரணத் தினால் இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறீர்கள் என்ற சங்கதிகளைக் கொஞ்சம் நிதானமாகச் சொல்லுங்கள்’ என்றார்.

உடனே மூர்த்தி முதலியார் என்பவர் அவரைப் பார்த்து, “என்ன ஐயா முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைப்பது போலப் பேசுகிறீரே எந்த விஷயத்தையும் அறியாத காக்கை பிடிக்கும் பைத்தியக்காரி போலப் பேசினால், உம்மை விட்டு விடுவார்களென்று எண்ணிக்கொண்டு இப்படி சாமர்த்தியம் செய்கிறீரா மற்ற விஷயத்தைத்தான் அடியோடு புரட்டுகிறீர் என்றால், அதோ கண்ணுக்கு எதிரில் மலைபோல் நிற்கும் அம்மாளைப் பார்த்தும் பார்க்காதவர் போலப் பாசாங்கு பண்ணு