பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 செளந்தர கோகிலம்

விட்டால், இப்பேர்ப்பட்ட மகா பயங்கரமான அபாயம் நேர்ந்ததற்கு சுவாமியின் சகாயம் மாத்திரம் இல்லாதிருந்தால், இந்நேரம் கோகிலாவின் மானமும் பிராணனும் ஒருங்கே அழிந்து போயிருக்கும். மனிதர் மூலமாகத்தானே தெய்வம் காப்பாற்ற வேண்டும் என்பது ஒருபுறமிருந்தாலும், இப்பொழுது நாமெல்லோரும் தெய்வ கடாrத்தைத்தான் முக்கியமாகப் பாராட்ட வேண்டும்” என்று நிரம்பவும் நயமாகவும் பரிவாகவும் கூறினார்.

அதற்குமுன் கோகிலாம்பாளும், செளந்தர வல்லியும் பேசிக் கொண்டதை மிகுந்த வியப்போடு கவனித்துக் கேட்டபடி மெளனமாக நின்று கொண்டிருந்த உறவினர்கள் அனைவரும் திடுக்கிட்டு அப்பொழுது பேசியது யார் என்று உற்றுப் பார்த்து, அது சுந்தரமூர்த்தி முதலியார் என்று உணர்ந்து, அவர் எவ்வித மான புதிய செய்தியைத் தெரிவிக்கப் போகிறாரோ வென்று மிகுந்த ஆவலுடன் அவரது வாயைப் பார்த்தபடி நின்றனர். தான் எதிர்பாராதவிதமாய் அவர் அந்த அசந்தர்ப்ப வேளையில் அங்கே வந்து பேச ஆரம்பித்ததைக் கண்ட கோகிலாம்பாள் திடுக்கிட்டு நடுநடுங்கி மிகுந்த திகில் கொண்டு குன்றிப் போய் தான் என்ன செய்வதென்பதை உணராமல் தலை குனிந்து நின்றாள். அப்பொழுது தனது தாய்க்கருகில் போய் நின்று கொண்டிருந்த செளந்தரவல்லியம்மாள் சுந்தரமூர்த்தி முதலியாரைக் கண்டவுடன் கட்டிலடங்கா மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்தாள். ஆனாலும் ஒருவித நாணமும் கொண்டவளாய்த் தனது உண்மையான மன நிலைமையை மறைத்துக் கொண்டு தனது தாயைப் பார்த்து, ‘அம்மா இதென்ன புதைவாணம் போலப் புதிய புதிய சங்கதியாய்க் கிளம்புகிறதே! தனக்கு எவ்வித அபாயமும் நேரவில்லையென்று இப்போது தானே நம்முடைய கோகிலா சொல்லி வாயை மூடினாள். அவளுக்கு மகா பயங்கரமான அபாயம் நேரிட்டதாகவும், அதிலிருந்து தெய்வந்தான் அவளைக் காப்பாற்றியதென்றும் இப்போது ஒரு புதிய சங்கதி பிறக்கிறதே! பட்டுப் பட்டுத்தானே மனிதர் தேற வேண்டுமென்று கோகிலா சொன்னபோது, அவள் இனி நிஜத்தை மறைக்கமாட்டாள் என்றல்லவா. நான் எண்ணிக் கொண்டேன். பேஷ்! அக்காள் நல்ல வழியில்தான் தேர்ச்சியடைந்திருக்கிறாள்!” என்றாள்.