பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 279

கட்டுவேனென்று ஒரே பிடிவாதமாக இருக்கிறாள். உங்கள் தமையனார் கோகிலாவையே கட்டிக் கொண்டாலும் அல்லது அன்னியர் வீட்டுப் பெண் எவளையாகிலும் கட்டிக் கொண்டா லும், செளந்தரவல்லி உடனே கிணற்றில் விழுந்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டு விடுவாள். இது நிச்சயமான சங்கதி. நீங்கள் இந்த இரண்டொரு தினங்களாய் இங்கிருந்து பழகியதில், அவளுடைய குணம் உங்களுக்கே நன்றாகத் தெரிந்திருக்கலாம். உங்கள் தமையனாருடைய மனம் இன்னமும் பழைய மாதிரியே இருக்கும் பrத்தில் அதை எப்படியாவது நீங்கள்தான் மாற்றித் திருப்பவேண்டும். இந்த விஷயத்தில் நான் உங்களைத்தான் மலைபோல நம்பியிருக்கிறேன்” என்றாள்.

உடனே கோகிலாம்பாள் பேசத் தொடங்கி, ‘அம்மா! நான் இவர்களுடைய பங்களாவில் இருந்தபொழுது இந்தப் பிரஸ் தாபம் வந்து ஒரு விதமாக முடிவாகிவிட்டது. நீங்கள் எண்ணியது போலவேதான் இவர்களுடைய தமயனார் முதலில் பிரியப்பட்டு அதை என்னிடமே நேரில் தெரிவித்தார்கள். நான் அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியான சமாதானங்களைச் சொன்னதன்மேல் அவர்கள் அதை ஏற்று, செளந்தராவையே தாம் கட்டிக் கொள்வதாய் ஒப்புக்கொண்டு விட்டார்கள். அந்த சந்தோஷச் செய்தியை உங்கள் மூவரிடமும் முதல் முதலில் சொல்ல வேண்டு மென்ற ஆசையோடு நான் இங்கே ஒடி வந்தேன். வந்த இடத்தில்

இவ்விதமான விபரீதம் நேர்ந்துவிட்டது” என்றாள்.

உடனே புஷ்பாவதி நிரம்பவும் பரிவாகவும் உருக்கமாகவும் பேசத்தொடங்கி, “என் தமயனாரும் சரி, நானும் சரி, எப்போதும் நியாயத்துக்குக் கட்டுப்படுகிறவர்கள். எங்களுக்கு மனிதரே பிரதானம், நீங்கள் மூவரும் தங்கமான மனிதர்கள். உங்கள் மூவருடைய குணத்தழகும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. கோகிலாவுக்கும், செளந்தராவுக்கும் அதிக பேதம் பாராட்டி நாங்கள் ஆரம்பத்தில் பேசியது தவறென்பதை இப்போது நாங்களே நன்றாக உணர்ந்து கொண்டோம். எந்தப் பெண் மூலமாவது, உங்களுடைய சம்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டால், அதுவே போதுமானது. கிரகசாரத்தினால் உங்களுக்கு இந்த இரண்டு மூன்று தினங்களாய் நேரும் அவமானத்தைக் கண்டு