பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 29

ரால் பெருத்த அபாயம் நேரிட, அதையும் தெய்வாதுக் கிரகத்தினால் தான் பரிகரித்துக் கொண்டு முற்றிலும் சோர்ந்து தளர்ந்து வாடித் துவண்டு மெலிந்து வந்த சமயத்தில் எதிர்பாரா விதமாய்த் திடீரென்று சிப்பாயிகளிடம் தான் அகப்பட்டுத் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தனது உயிரையே கொடுத்துவிட எத்தனித்த சமயத்தில் திடீரென்று சுந்தரமூர்த்தி முதலியார் வந்து தன் உயிரையும் மானத்தையும் காத்ததனால் ஏற்பட்ட மன எழுச்சியும், அத்தகைய பரம விகாரமான நிலையில் இருந்த தான் அவரது முகத்தில் எப்படி விழிக்கிறது என்ற அபாரமான கிலேசமும் காட்டாற்று வெள்ளம்போலத் திடீரென்று பொங்கி எழுந்து, அவள் சகிக்கத் தக்க வரம்பை மீறிப் பெருகிப் போனமையால், அந்த மடக் கொடி தனது கண்களைமூடிக் கொண்டு அப்படியே மயங்கி மணலில் சாய்ந்துவிட்டாள்.

அவளது விபரீத நிலைமையைக் கண்ட சுந்தரமூர்த்தி முதலியார் பதறிப்போய் ஒடோடியும் சென்று அவளண்டை நெருங்கி அவளது வாயிலிருந்த துணிப்பந்தை எடுத்துக் கீழே போட்டுக் கை கால்கள் முதலியவற்றின் கட்டுகளையும் ஒரே நொடியில் விலக்கிய வண்ணம் மிகுந்த வாஞ்சையும் பிரேமையும் த்வனித்த நயமான குரலில், ‘கோகிலா கோகிலா! உடம்பு என்ன செய்கிறது? எழுந்து வருகிறாயா வண்டி வரையில் நீ நடந்து வரமுடியுமா?’ என்றார்.

கோகிலாம்பாள் பேசாமல் அசைவற்றுப் படுத்திருந்தாள். ஆனால், மூச்சு மாத்திரம் வந்து கொண்டிருந்தது. அவள் மூர்ச்சித்து மயங்கிப் படுத்திருக்கிறாளென்று உணர்ந்த சுந்தரமூர்த்தி முதலியார் மினியனைப் பார்த்து, ‘'மினியா! அம்மாள் பயத்தினால் மயங்கிப் படுத்திருக்கிறார்கள். ஆனாலும் பயமில்லை. கொஞ்ச நேரத்தில் தெளிவடைந்து எழுந்திருப் பார்கள். இந்தச் சிப்பாயிகள் பொல்லாதவர்கள். இவர்கள் போய் துணைக்கு இன்னம் பலரை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தாலும் வருவார்கள். நாம் இப்போது ஒரு நிமிஷம் கூட இங்கே அம்மாளை வைத்துக்கொண்டு இருப்பது சரியல்ல. அம்மாளைத் தூக்கிக்கொண்டு போய் வண்டியில் படுக்க