பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் - 33

அன்பும் வணக்கமும் காட்டி மொழிந்ததன்றி, சிறிது தூரத்தில் கிடந்த ஒரு திண்டை எடுத்து லோபாவின் ஒரு பக்கத்தில் வைத்து நமது கோகிலாம்பாளை மிருதுவாகப் பிடித்து அதில் சார்த்த முயன்றனர். அவள் தம்மைக் கண்டு நாணமடைந்து எழுந்திருக்க முயன்றதையறிந்த சுந்தரமூர்த்தி முதலியார், ‘பெண்ணே! கோகிலா! எழுந்திருக்காதே; எழுந்திருக்காதே. விழுந்துவிடப் போகிறாய். வேண்டுமானால் நான் அப்பால் போகிறேன்” என்று அன்பொழுக மொழிந்தவண்ணம் அவளுக்கு எதிரில் நிற்காமல் சிறிது தூரம் விலகி ஒரு பக்கமாக மறைந்து கொண்டு வேலைக்காரிகளை நோக்கி ஏதோ சைகை செய்தார்.

கோகிலாம்பாளின் தேகம் அப்போதும் தனது பழைய நிலைமையை அடையாமல் முற்றிலும் கேவலமான ஸ்திதியில் இருந்தமையாலும், சுந்தரமூர்த்தி முதலியார் எதிரில் நிற்காமல் மறைந்து போனமையாலும், அவள் வேலைக்காரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்படியே திண்டின்மேல் சாய்ந்து கொண்டாள்.

அவளுக்கருகில் இருந்த வேலைக்காரிகள் இருவரும் ஒரு தாய் குழந்தைக்கு லாலனபாலனம் செய்வதுபோலக் கோகிலாம்பாளின் மனத்திற்கு நிரம்பவும் ஹிதமாகவும் இன்பகர மாகவும் நடந்து, அவளுக்குக் காப்பி முதலிய பானங்களைக் கொடுத்து அடிக்கடி விசிறி இரண்டொரு நாழிகை காலத்தில் அவள் நன்றாகத் தெளிவடையும்படிச் செய்தனர். அதன்பிறகு கோகிலாம்பாள் எழுந்து சாதாரணமாக உட்கார்ந்து கொண்டாள். அதுகாறும் மறைவில் இருந்த சுந்தரமூர்த்தி முதலியார் அங்கிருந்தபடியே பேசத் தொடங்கி, ‘பெண்ணே கோகிலம்! உடம்பு இப்போது எப்படி இருக்கிறது! வேலைக்கார மினியன் சொன்ன வரலாற்றைக் கேட்டதில், நீ இன்று காலைமுதல் இன்னும் ஆகாரமே சாப்பிடவில்லையெனத் தெரிகிறது. ஆகையால், முதலில் கொஞ்சம் ஆகாரம் சாப்பிட்டால்தான், உன் களைப்பெல்லாம் நன்றாகத் தெளியும். எழுந்து சமையல் கட்டுக்குப் போய்ச் சாப்பிட முடியுமானால், அங்கேயாவது அழைத்துக்கொண்டு போகச் சொல்லுகிறேன்; அல்லது, இவ்விடத்திற்கு ஆகாரத்தைக் கொண்டுவரச் சொன்னாலும்,

செ.கோ..!!!-3