பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 செளந்தர கோகிலம்

கொண்டு எங்கள் குடும்ப நிர்வாகத்தையும் வகிக்கவேண்டும். தாங்கள் அவளை உல்லங்கனம் செய்து தள்ளி வேறே யாரையாவது கட்டிக்கொண்டால் அவளுடைய மனம் முறிந்து போய்விடும். அவள் தற்கொலை செய்துகொண்டாலும் கொள்வாள். பிறகு அந்தப் பாவம் தங்களைத்தான் சுற்றிக் கொள்ளும். என் விஷயத்தைப்பற்றித் தாங்கள் கொஞ்சமும் கவலை கொள்ளவேண்டாம். எனக்கு ஏற்பட்ட தலைவிதியை நான் எப்படியாவது ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். இப்போது சிறைச்சாலையில் இருக்கிறவர்களுக்குத் தண்டனை முதலிய இழிவு ஏற்படுமானாலும், அதன் பிறகு அவர்களை நான் கட்டிக் கொள்வதால், எனக்கு இழிவும் துாஷணையும் ஏற்படுவது நிச்சயமானாலும், என் அபிப்பிராயத்தில் நான் செய்வதே நிரம்பவும் பூஷணையான செய்கையென்றும் தர்மத்திற்கு ஒத்த செய்கையென்றும் நான் கருதுகிறேன். ஆனால் என்னால், என் தங்கைக்காவது, நம்முடைய குடும்பங்களின் கண்ணியத்திற்காவது இழுக்கு நேருமோவென்று தாங்கள் நினைப்பது சகஜமே. அதற்கும் நான் ஒரு பரிகாரம் செய்துவிடுகிறேன். என்ன என்றால், நான் இப்போது எங்கள் பங்களாவுக்குப் போனவுடன் என் தாயாருடன் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசி அதற்குத் தகுந்த ஏற்பாட்டைச் செய்யச் சொல்லுகிறேன். அதாவது எங்கள் சொத்தில் எனக்குச் சேரவேண்டியதை ஒர் உத்தேசமாகப் பிரித்துக் கொடுக்கச்செய்து, அதை நான் வாங்கிக்கொண்டு என் தங்கையைவிட்டு விலகிப் பிரிந்துபோய், எங்களுக்கு வண்ணாரப் பேட்டையில் இருக்கும் இன்னொரு பங்களாவில் நான் தனியாக இருந்துவிடுகிறேன். என் தாயாரும் தங்கையும் ஒன்றாக இருக்கட்டும். தாங்கள் அவளைக் கட்டிக்கொண்டு எல்லாச் சொத்துக்களையும் தங்களுடைய நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு rேமமாக இருங்கள். தங்கள் கலியாணத்திற்குக்கூட நான் வரலாமென்று தாங்களும், என் தங்கையும் அநுமதி கொடுத்தால் நான் வருகிறேன். இல்லையானால், நான் மறைவாக தூரத்தில் இருந்துவிடுகிறேன். ஆகையால் அந்த ஆக்ஷேபமும் தங்களுக்கு இனி இராதென்று நினைக்கிறேன். தெய்வம் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்ததற்குத் தாங்கள் ஏதோ ஒர் உள் கருத்தை எடுத்துக் காட்டினர்கள் அல்லவா. அது ஒரு விதத்தில்