பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 செளந்தர கோகிலம்

வாக்களிக்கையில், தாம் அவ்வாறு விகாரமாக நடந்துகொண்டு தமது rாத்திரத்தைக் காட்டினால், அவளது தங்கையை மணந்துகொள்ளத் தமக்குச் சிறிதும் விருப்பம் இல்லையென்ற எண்ணமும் அவளது மனத்தில் உதிக்கும் என அவருக்குப் பட்டது. ஆகையால் இருவகையிலும் அவள் தம்மீது சந்தேகம் கொள்ள இடங்கொடாமல் தாம் நிரம்பவும் எச்சரிப்பாக நடந்துகொள்ள வேண்டுமென்று முடிவு செய்துகொண்டவராய், சுந்தரமூர்த்தி முதலியார் அரும்பாடுபட்டுத் தமது மனத்தை அடக்கிக்கொண்டு அவளை நோக்கி முற்றிலும் கபடமாகவும் நயவஞ்சகமாகவும் பேசத்தொடங்கி, ‘கோகிலம்: ஆகா! உன்னுடைய குணத்தை நான் வேறே எவரிடத்திலும் இதுவரை யில் கண்டதே இல்லை; இனி நான் காணப் போகிறதும் இல்லை. மனிதர் இப்படி ஒரே உறுதியாய் இருப்பது இந்தக் கலிகாலத்தில் மகா அருமையான விஷயம். நான் இந்த விஷயத்தை இப்போது உன்னிடம் இவ்வளவு தூரம் பிரஸ்தாபித்துப் பார்ப்பதற்கே அன்றி வேறல்ல. உன்னைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று முதல் முதலில் நான் ஒரே பிடிவாதமான எண்ணம் கொண்டது நிஜமே. அதன்பிறகு உங்கள் குடும்ப ரகளியங்களை நான் என் தங்கையின் மூலமாய் அறிய அறிய, என் மனவுறுதி கொஞ்சம் கொஞ்சமாய்த் தளர்ந்து கொண்டே வந்தது. உன்னைவிட்டு உன் தங்கையைக் கட்டிக்கொள்வதற்கு என் மனம் முதலில் இணங்குவது கொஞ்சம் பிரயாசையாகத்தான் இருந்தது. ஆனால், உன் தங்கையும் நல்ல குணவதியென்றும், புத்திசாலி என்றும், சகமான விஷயங்களிலும் உனக்கு அநேகமாய் சமதையாகச் சொல்லத் தகுந்தவளென்றும் புஷ்பாவதி எனக்குச் சொன்னாள். அதுமுதல் நான் உங்கள் இருவரையும் சமதையாகவே மதித்து வருகிறேன். கண்ணபிரான் முதலியாரைவிட்டு வேறே யாரையும் நீ இனி கட்ட மாட்டாயென்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், அந்தப் பேச்சை எடுத்தால், அதன் மூலமாய் உன் தங்கையை எனக்குக் கொடுக்கும் விஷயமாவது நிச்சயப்படுமல்லவா? முக்கியமாய் அதைக் கருதியே நான் உன்னிடம் இந்தப் பிரஸ்தாபத்தைச் செய்தது. அதுவுமன்றி நான் உன்னிடம் வைத்துள்ள அளவிடமுடியாத வாஞ்சையும்