பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 75

கோகிலாம்பாள் நேரில் போனது முற்றிலும் அசம்பாவித காரியமாய்த் தோன்றியது. பூஞ்சோலையம்மாளது குடும்பத்தில் பெண்மக்களே இருந்தனர் என்பது அவர்களது உறவினருக்குத் தெரிந்த விஷயம். ஆதலால், அவர்கள் ஏதேனும் பேச விரும்பினால், தாங்களே நேரில் புரசைப்பாக்கம் பங்களாவிற்கு வருவதே இயற்கையன்றி, அசந்தர்ப்பமான நிலைமையிலுள்ள பெண்டீரை அழைத்தார்கள் என்பது பொருத்தமான செய்தியாகத் தோன்றவில்லை. ஆதலால் புஷ்பாவதியம்மாள் பூஞ்சோலையம்மாள் கூறிய வரலாற்றைச் சிறிதும் நம்பாதிருந்த தன்றி கோகிலாம்பாள் எதைப்பற்றி அவ்வளவு அவசரமாகத் தனியாகப் போகிறாள் என்பதையும் அறியவேண்டுமென்ற ஆசையும் ஆவலும் பிரமாதமாக எழுந்து அவளைத் துாண்டிக் கொண்டிருந்தன. ஆனாலும், அவள் தனது மன நிலைமையை வெளியில் காட்டிக்கொள்ளமல் சிறிதும் கபடமறியாத பேதை போலப் பூஞ்சோலையம்மாளுடன் இருந்து அவளுக்குரிய ஆறுதல் மொழிகளையும் வேதாந்தங்களையும் கூறிக்கொண்டிருந்தாள். பூஞ்சோலையம்மாள் குடும்ப விவகாரங்களைப்பற்றி வேலைக் காரர்களோடு சம்பாஷித்திருந்த காலங்களிலும், அவைபோன்ற வேறு அற்ப காரியங்களைக் கருதி புஷ்பாவதியைவிட்டு வெளியில் போயிருந்த காலங்களில், அவள் மெதுவாக அவ் விடத்தைவிட்டு செளந்தரவல்லியம்மாள் இருந்த இடத்திற்குப் போவதும், அவளிடம் அந்தரங்கமாகப் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதுமாய் இருந்தாள். தமது சொந்தக்காரரது விருப்பத்தின்படி ஏதோ காரியத்தைப்பற்றி கோகிலாம்பாள் அவசரமாய்ப் போய் இருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டவுடனே செளந்தரவல்லியம்மாள் அதை நம்பாமல் கைகொட்டிக் கலகலவென்று நகைத்து, “இது முழுப் பூசணிக் காயை இலைச்சோற்றில் மறைக்கிற கதையாக இருக்கிறதே! எங்களுடைய சொந்தக்காரர்கள் நாலைந்து வீட்டுக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தக்க பெரிய மனிதர்கள்; அவர்கள் எங்களை எப்போதும் மரியாதையாக நடத்துகிற வர்கள். அவர்கள் எங்களிடம் எதைப்பற்றியாவது பேசவேண்டு மானால் தாங்களே நேரில் வருவார்களேயன்றி எங்களை ஒருநாளும் அழைத்ததில்லை, அவர்கள் வந்தாலும், எங்கள்