பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 83

இறங்கி இருப்பதென்ன! அடடா! உலகத்தில் அநேகமாய் எல்லோருமே இப்படித்தான் நடந்துகொள்வார்கள் போலிருக் கிறதே தாம் சம்பந்தப்படுகிற வரையில், தங்களை எந்த நீதியும் கட்டுப்படுத்தாது. தங்களுடைய சுயநலத்தைச் சாதித்துக் கொள்வதற்கு தாம் எப்படிப்பட்ட இழிவான காரியத்திலும் இறங்கலாம்! எதைவேண்டுமானாலும் கூசாமல் செய்யலாம். அவ்வளவும் நியாயமும் அவசியமுமான செய்கை மற்றவருக்கு எப்படிப்பட்ட சந்தர்ப்பம் நேர்ந்தாலும், அவர்கள் அற்ப தவறும் செய்யாமல், திராசு முனை நிற்பதுபோல நடுநிலை தவறாமல் ஒழுங்காய் நடந்துகொள்ளல் வேண்டும். ஒரு மயிரிழை தவறி நடந்தாலும், அதோடு குடிமுழுகிப்போய் விட்டதென்று சொல்லி இப்பேர்ப்பட்ட சுயநலவாதிகள் அமர்க்களப்படுத்தி விடுவார்கள். இருக்கட்டும். அந்தக் கோகிலாம்பாள் வரட்டும். நான் இன்று அவளை இலேசில் விடுகிறதில்லை. இன்றோடு அவள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டும். அல்லது வீட்டைவிட்டு இராத்திரியே ஒடிப்போக வேண்டும். அப்படிப் பட்ட பெரிய மானபங்கம் பண்ணிவிடுகிறேன். இந்தக் கடிதத்தை நான் புஷ்பாவதியம்மாளிடம் காட்டுவது சரியல்ல. காட்டினால், இவளும், இவளுடைய தமயனாரும் இவர்களிடம் வைத்துக்கொண்டிருக்கும் கொஞ்ச மதிப்பும் அடியோடு போய்விடும். இவளுடைய தமயனார் என்னைக் கட்டிக்கொள்ள மாட்டேனென்று சொன்னாலும் சொல்லிவிடுவார். அதுவுமன்றி, அவள் புறப்பட்டுப் போயிருப்பதைப்பற்றி இவர்களுடைய மனம் ஏற்கெனவே ஆயாசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிலைமையில் இந்தக் கடிதத்தை இவர்கள் பார்த்தால், அது எரிகிறநெருப்பில் எண்ணெயை வார்த்த மாதிரி முடியும். இன்று இரவு எப்படியாவது அவரை நான் வரவழைத்து வைத்துக் கொண்டு, அக்காள் செய்தமாதிரி நானும் சந்தோஷப்பட வேண்டும். அப்படிச்செய்யாவிட்டால், என் ஆவல் அடங்காது போலிருக்கிறது. என் உடம்பு அவர்களை நினைத்துக் கட்டிலடங்காமல் பறந்துகொண்டிருக்கிறது. என் மனம் பைத்தியம் பிடித்தமாதிரி அதே நினைவாய் நினைத்து என்னைச் சதாகாலமும் கொன்றுகொண்டே இருக்கிறது. எப்படியாவது நான் இன்று இரவு புஷ்பாவதியின் தமயனாரை வரவழைத்து