பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 செளந்தர கோகிலம்

போல கட்டிலடங்கா வேகமும் ஆவேசமும் கொண்டு ஒரே ஒட்டமாய் சத்திரத்திற்கு ஒடி அண்டை வீடுகளிலிருந்த ஆட்களைக் கூவியழைத்து விஷயத்தை அவர்களிடம் தெரிவிக்கவே, எஜமானியம்மாளுடைய வாயிலிருந்து பிறந்த உத்தரவுகள் யாவும் ஐந்து நிமிஷ நேரத்தில் அப்படியே நிறைவேற்றப்பட்டுப் போயின. அது பெருத்த திருவிழா நடைபெறும் இடம்போல மாறிவிட்டது. அந்த மண்டபம் பன்னீர் தெளிக்கப்பட்டுத் தோரணங்களாலும் தேர்ச்சீலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுப் போயிற்று. மங்களகீதம் ஜாம் ஜாம்மென்று முழங்க, கோவில் குருக்கள் முதலிய் வைதிகப் பிராமணர்கள் பூர்ணகும்பம், பரிவட்டம், சுவாமி பிரசாதங்கள் முதலியவற்றுடன் வந்து சேர்ந்துவிட்டனர். ஸோபாக்கள் வெள்ளித் தட்டுகளில் கனிவர்க்கங்கள் பவுன் முதலியவைகளும் வந்து சேர்ந்தன. விளாமிச்சம் வேர் விசிறிகளை வாங்கிய அந்த ஸ்திரீ தனது புருஷரிடம் ஒன்றைக் கொடுத்துத் தான் ஒன்றை வைத்துக் கொண்டாள். அப்பொழுதும் அந்த அம்மாளின் புருஷர் திவான் சாமியாரது அடையாளத்தைக் கண்டு கொள்ள மாட்டாமல் தயங்கித் தயங்கி நிற்க, அதை உணர்ந்த அந்த ஸ்திரீ என்ன! எஜமானே! இன்னமும், உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை? இவர்கள் சத்திரத்தின் சொந்தக்காரர் என்று நான் தான் சொன்னேனே! அதிலிருந்து கூடவா, உங்களுக்கு விஷயம் விளங்கவில்லை! நாம் மறுஜென்மம் எடுக்கும்படி அநுக்கிரகித்த நம்முடைய காருண்ய வள்ளலல்லவா இந்தக் கோலத்தில் வந்திருக்கிறார்கள்!” என்று கூறித் தனது கையிலிருந்த விசிறியால் திவான் சாமியாருக்கு விசிறினாள்; அவளது புருஷரும், அவ்வாறே செய்யத் தொடங்கினார். அத்தனை வைபவங்களையும் பார்த்தபடி முற்றிலும் பிரமித்து ஸ்தம்பித்து உயிரற்ற பதுமை போல உட்கார்ந்திருந்த திவான் சாமியார் அது கனவோ நினைவோவென்று சந்தேகித்தவராய், “என்ன ஆச்சரியம் இது! பார் இவர்கள் என்பது தெரியவில்லை. இந்தச் சத்திரத்திற்கும் இன்னம் பல இடங்களிலுமுள்ள சத்திரங்களுக்கும் நான் சொந்தக்காரனாமே! நான் எந்தச் சத்திரத்தையும் கட்டி வைத்ததாக நினைவே இல்லையே! நான் இன்னான் என்பதை உண்மையிலேயே இவர்கள் தெரிந்து கொண்டார்களா!