பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியானப் பைத்தியம் 129

விட்டுச் சென்றாளல்லவா? சென்றவள் நேராக சமையலறையை அடைந்து, தனது இராப்போஜனத்தை அவசரமாக முடித்துக் கொண்டு தனது படுக்கையறைக்குப் போய்ச் சேர்ந்தாள். தான் வேண்டுமென்றே அத்தனை காரியங்களையும் நடத்தியிருக்கிறதாக மற்றவர் சிறிதும் சந்தேகமுறாதபடி தான் நிரம்பவும் சாமர்த்திய மாய் நடந்து கொண்டதைப் பற்றிய தற்பெருமையினாலும், தனது தாய் அக்காள் முதலியோர் செய்த தவறுக்கு அவர்களைத் தான் நன்றாக தண்டித்துவிட்டதாக எண்ண, அதனால் ஏற்பட்ட அபாரமான மகிழ்ச்சியினாலும் உற்சாகத்தினாலும் மெய்ம்மறந்து ஆனந்தமயமான ஒருவித ஆவேசங்கொண்டு நேராகத் தனது சயனத்திற்குப் போய்ச் சேர்ந்தாள். அன்றையதினம் இரவு பத்துமணிக்குள் தமது தமயனார் அவளைச் சந்திக்கும்படி தான் அவசியம் செய்வதாய்ப் புஷ்பாவதி கூறியிருந்தாள். ஆதலால் அந்த வாக்குறுதியை அவள் எப்படியும் நிறைவேற்றி வைப்பாளென்ற நம்பிக்கை அவளது மனத்தில் தோன்றியது. ஆனாலும், தமது பங்களாவிற்கு வந்து சுந்தரமூர்த்தி முதலியார் மற்ற ஜனங்களோடு திடீரென்று வெளியில் போய்விட்டாராதலால் அவர் தன்னைச் சந்திக்கமாட்டாரோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. அதுவுமன்றி, தனது அக்காள் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஏதோ துன்மார்க்கமான நோக்கத்துடன் போய் வந்திருக்கிறாள் என்ற நினைவை மற்றவர்கள் கொண்டது போலவே செளந்தரவல்லியும் கொண்டிருந்தாள். ஆதலால், சுந்தரமூர்த்தி முதலியாரும் அவ்வாறு கோகிலாம்பாள் நடந்துகொண்டதைக் கண்டு தன்மீது அருவருப் படைந்து, தன்னை மணக்க மனமில்லாதவராய்ப் புறப்பட்டுப் போயிருப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்து உலப்பத் தொடங்கியது. ஆகவே செளந்தரவல்லி மாறி மாறி சந்தோஷமும், கவலையும் கொண்டவளாய்த் தனது சயன அறையை அடைந் தாள். அடைந்தவள் நேராகத் தனது மெத்தையின்மேல் வைக்கப் பட்டிருந்த ஒரு கடிதம் அவளது திருஷ்டியில்பட்டது. அவள் மிகுந்த வியப்பும் ஆவலும் கொண்டு அதை எடுத்து, அதன் மேலிருந்த உரையைப் பார்த்தாள். உரையில் எழுத்துகளே காணப்படவில்லை. அந்த மடந்தை அவசரமாக அதன் உரையைக் கிழித்தெறிந்துவிட்டு உள்ளே இருந்த சிறிய துண்டுக் காகிதத்தை வெளியில் எடுத்து விளக்கின் வெளிச்சத்தில் செ.கோ.IV-9