பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 செளந்தர கோகிலம்

மறைக்க முடியுமா? உண்மையில் கோகிலாம்பாள் கொஞ்சமும் குற்றமற்றவளாக இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப் பொழுதும்கூட, கெட்டுப்போன அவளுடைய பெயர் இனி பழைய நிலைமைக்கு வரப்போகிறதா? வந்தாலும், சக்கையும் தண்ணிருமாய் முறிந்துபோன பாலை மறுபடி நன்றாய்ச் சேர்த்து வைக்கிற மாதிரியேயன்றி வேறல்ல. இந்த நிலைமையில் இப்போது உனக்குக் கலியாணம் நடந்தால், உங்கள் ஜனங்கள் யாராவது வருவார்களென்று நினைக்கிறாயா? ஒரு நாளும் வரமாட்டார்கள்.

செளந்தரவல்லி : ஆம், மெய்தான். யாரும் வரமாட்டார் கள்தான். அப்படியானால், இவர்களுக்காக, இன்னம் எவ்வளவு காலத்துக்கு என் கலியாணத்தை நிறுத்தி வைக்கிறது?

சுந்தரமூர்த்தி முதலியார் : உன்னுடைய ஆயிசு காலம் முடிய நிறுத்தி வைத்தாலும், இந்தக் கெட்ட பெயர் மாறப் போகிறதில்லை. இவ்வளவோடு அவர்கள் சும்மா இருந்து இனியும் கெட்ட பெயருக்கு இடங்கொடாமல் இருப்பார்களா! அதுவுமில்லை. இவர்கள் அந்தக் கண்ணபிரான் முதலியாரை விடுவிக்கவும், அவருடைய தாயாரைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளவும் பலவிதத்தில் முயற்சிகள் செய்யத்தான் போகிறார்கள். அவர் தண்டனையடைந்து வந்தால் கூட கோகிலாம்பாள் அவரைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாளாம். அப்படியெல்லாம் செய்தால், ஏற்கெனவே கெட்டுப் போயிருக்கும் இவர்களுடைய பெயர் இன்னம் அடியோடு கெட்டுப்போகுமேயன்றி உள்ளது மறையாது. செளந்தரவல்லி : ஆம். மெய்தான். அப்படியானால், தாமதம் ஆக ஆக, கெடுதலும் கெட்ட பெயரும் அதிகப்படுமே யன்றி வேறல்ல. ஆகையால், காலதாமசமில்லாமல், என்னுடைய கலியாணத்தை முடித்துக்கொண்டு இப்போதே நான் விலகிக் கொள்வது தான் உசிதமாகத் தோன்றுகிறது.

சுந்தரமூர்த்தி முதலியார் : கலியாணத்தை முடித்துக் கொண்டு, பிறகு விலகுவதென்றால், கலியாணத்தின்போது உன் அக்காளும் நீயும் ஒன்றாயிருக்கிறதென்று அர்த்தமாகிறது. கலியாணத்துக்கு யாரும் ஜனங்களே வரப்போகிறதில்லை.