பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 செளந்தர கோகிலம்

பக்கத்தில் உட்காரும் பெண்ணை உற்றுப் பார்க்க மாட்டான். ஏனென்றால், மற்றவர் ஏதாவது சொல்லப் போகிறார்களே என்ற கிலேசம் இருக்கும். நீயும் நன்றாக புடவை ரவிக்கைகள், ஏராளமான வைர ஆபரணங்கள் முதலியவைகளுடன் போய் உட்கார்ந்து கொண்டால், அதிக வித்தியாசம் தெரியாது. அந்தப் பெண்தான் வந்திருப்பதாக அவன் நினைத்துக் கொள்வான். பிற்பாடு எல்லாம் சரியாய்ப்போகும். அவன் உன்னிடம் நெருங்கிப் பார்த்து படத்துக்கும் உனக்கும் வேற்றுமை இருப்ப தாகச் சந்தேகப்பட்டாலும், காரியம் முடிந்து போனதைக் கருதி, அவன் என்னிடம் அதைப் பிரஸ்தாபிக்கவும் மாட்டான்; பிரஸ்தாபித்தாலும் நான் உன்னுடைய படத்தையே காட்டியதாக அழுத்திச் சொல்லிவிடுகிறேன். அந்தப் படத்தில் இருப்பது போலவே நீயும் அலங்காரம் செய்துகொண்டு ஒரு படம் பிடித்து அதை அவனிடம் கொடுத்து, அதைத்தான் நான் அவனிடம் காட்டியதாகச் சொல்லி விடுகிறேன். சங்கதி அவ்வளவு தூரத்துக்கு ஒரு நாளும் வளரப் போகிறதில்லை. நம்முடைய இஷடம் போலவே எல்லாம் ஜெயமாக முடிந்துபோகும். நீ எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம்.

புஷ்பாவதி : சரி. நீங்கள் இருக்கையில் நான் ஏன் கவலைப்படுகிறேன். எப்படியாவது எவ்வித இடையூறுமில் லாமல் இரண்டு கலியானங்களும் நிறைவேறிப் போனால், பிறகு நமக்குக் கொஞ்சமும் கவலையில்லை. அதுவரையில் உள்ளுக்குள் கொஞ்சம் சஞ்சலம் இருப்பது சகஜந்தானே.

சுந்தரமூர்த்தி முதலியார் : நீ எதைப்பற்றியும் சஞ்சலப் பட வேண்டியதே இல்லை. இனி காரியம் முடிந்த மாதிரியே. ஆனால், நீ கலியான காலம் வரையில் இவ்விடத்திலே இருப்பது நல்லதென்று நினைக்கிறேன். மாப்பிள்ளை ஒரு வேளை உன்னை நேரில் பார்க்க வேண்டுமென்று சொன்னால் அவனை அழைத்து வந்து, உன்னை அவனுக்குக் காட்டாமல், துரத்தில் இருந்தபடி, செளந்தரவல்லியை அவனுக்குக் காட்டிவிடலாம் அல்லவா. இந்த இரண்டு கலியாணங்களையும் சேர்த்து மைலாப் பூரார் பங்களாவில் நடத்துவதில் சில நன்மைகள் இருக்கின்றன. நாம் கலியாணத்தை இங்கே நடத்தினால் சொந்த ஜனங்கள்