பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 21

யைப் பெற்றுக்கொண்டு சொத்துக்களை அவரது வசத்தில் விட்டுவிட்டதாகப் பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் செய்து கொடுத்து விட்டுச் சென்றனர். குஞ்சிதபாத முதலியாரிடம் அதிகாரம் பெற்ற அவரது குமாஸ்தா ஒருவர் திருவடமருதூருக்குச் சென்று சகலமான ஸ்தாவர சொத்துக்களையும் ஒப்புக் கொண்டு கிழவரது பிரதிநிதியாக இருந்து அவைகளின் நிர்வாகங்களை நடத்தத் தொடங்கினார். தமது ஜெனன பூமியாகிய திருவடமருதூருக்கே தாம் போய்விட வேண்டுமென்ற அவா கிழவரது மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தது. தாம் அந்த ஊருக்குச் சென்றால், ஜனங்களால் தமக்கு எவ்விதமான கெடுதலும் ஏற்படாதென்ற நம்பிக்கையும் தைரியமும் இருந்தன. ஆனாலும், உடனே புறப்பட்டு அங்கே போவது கிழவருக்கு ஒருவாறு கிலேசமா யிருந்ததுபற்றி அவர் மேலும் இரண்டொரு மாதகாலம் கழித்து, அது பழைய கதையான பிற்பாடு தாம் அங்கே போகலாமென்று தீர்மானித்து அதுவரையில் தாம் திருவையாற்றிலேயே இருக்க வேண்டுமென்று முடிவு செய்துகொண்டார். அதற்குள் தமது மனைவி முதலியோர் அகப்பட்டுப் போகும் பட்சத்தில், அவர் களோடு ஒன்றாய்ப் போவதே நல்லதென்றும் கிழவர் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் தமது மனைவியான கமலவல்லியைத் தாம் இனி அடைவது துர்லபம் என்ற அபிப்பிராயம் அவரது மனத்தில் தோன்றத் தோன்ற, அவருக்கு உலகப் பற்றில் ஒருவித விரக்தியும் பற்றின்மையும் பெருக ஆரம்பித்தன. அவர் ஒரு நாள் திவான் சாமியாரை நோக்கி, ‘அப்பா மோகலிங்கம்! அவ்வளவு தான் எனக்கும் அவளுக்கும் பிராப்தம்! விட்டுத் தள்ளு கழுதையை, அவள் என்ன நிதானத்தில் இருக்கிறாள் என்று பார்க்க வேண்டுமென்கிற ஒரு சபலத்தினால் நான் அவளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று சொன்னேனேயன்றி வேறல்ல. எனக்கோ வயசு ஏராளமாக நிறைந்துவிட்டது. இனி எனக்குச் சம்சாரம் எதற்காக? காடு வாவா என்கிறது வீடு போபோ என்கிறது. மிகுதியுள்ள சொற்ப காலத்தையும் நான் பரமாத் மாவின் திருப்பணிகளிலேயே போக்கி, மறுமைக்கு எனக்கு அத்யாவசியமான திருவருட் செல்வத்தைத் தேடும் வழியைப் பார்க்கிறேன். சம்சாரம் இருந்தால் அந்த வேலை குந்தகப்பட்டுப் போகும். அதற்கு அவகாசமே இல்லாமல் போய்விடும்.