பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 செளந்தர கோகிலம்

செய்துவிடுவோம். நாளைய தினம் சனிக்கிழமை; அது கழிய, ஞாயிற்றுக் கிழமை இந்தக் கோலத்தை விலக்கி விடுகிறேன். என்றார்.

உதவிச் சாமியார் : “ஆம் ஸ்வாமிகளே! அப்படியே செய்யுங்கள். இந்த சந்நியாசிக் கோலத்தோடு தங்களைப் பிடித்த பெருத்த சநியனும் ஒழிந்து போய்விடுமென்று நினைக்கிறேன். தாங்கள் இப்போது வருவதற்கு முன், பெரியவர் ரயிலில் பிரயாணம் செய்த அலுப்புத் தீரப் பல நாட்கள் பிடிக்கும் என்று சொன்னார்கள். ஆகையால் நாம் இந்த ஊரில் திங்கள் கிழமை பகல் வரையில் இருந்து அன்று இரவு வண்டியில் ஏறிப்போய் விடுவோம். நான் இன்னொரு விஷயத்தையும் தங்களிடம் சொல்ல மறந்து போய்விட்டேன். நான் அந்த சப் இன்ஸ்பெக் டர்கள் இருவரையும் எங்கே கண்டேன் தெரியுமா போலீஸ் கமிஷனருடைய கச்சேரியில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அங்கே தான் கண்டேன். அப்போது அந்த அழகிய மணவாள முதலியாரும் அங்கே வந்தார்கள். வந்து, சப் இன்ஸ்பெக்டர் களுக்குத் தமது மனமார்ந்த நன்றியறிதல் கூறினார்கள். அவர்கள் தம்மாலொன்றும் ஆகவில்லையென்றும், இரண்டு கடிதங் களையும் கொணர்ந்து கொடுத்த சாமியார்களுக்கே எல்லா ஸ்தோத்திரமும் உரியது என்றும் சொன்னார்கள். நான் பக்கத்தில் இருந்தேன். உடனே அழகிய மணவாளர் என்னை நமஸ்கரித்து, சுவாமிகளே! தாங்கள் இருவரும் கடிதங்களைக் கொண்டு வராவிட்டால் இந்நேரம் நான் மீளாத படு குழியில் விழுந்திருப்பேன். தெய்வம்போல வந்து நீங்கள் இருவரும் காப்பாற்றினர்கள். நீங்கள் இருவரும் திங்கட்கிழமை நடக்கும் கலியாணத்துக்கு அவசியம் விஜயம் செய்து, எடுத்த காரியத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்’ என்று நூறு தடவை கேட்டுக் கொண்டார்கள். நான் தங்களையும் அழைத்துக் கொண்டு வருவதாக வாக்களித்துவிட்டேன்’ என்றார்.

அதைக்கேட்ட திவான், சாமியார், “சரி, அந்த வாக்கை நாம் அவசியம் நிறைவேற்றுவோம். திங்கள் கிழமை இரவிலேயே நாம் போகலாம்” என்றார்.