பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 செளந்தர கோகிலம்

நான் இப்போது எழுந்து இரண்டொரு வார்த்தைகள் சொல்வத் துணிகிறேன். லக்னம் இன்னும் இரண்டு நாழிகை வரையில் இருக்கிறது. அதற்குள் திருமாங்கலிய தாரணத்தை நடத்திவிட் லாம். முக்கியமான ஒரு விஷயம் எல்லோருக்கும் தெரிய வேண்டி யிருக்கிறது. அது முக்கியமாய் இந்தப் பங்களாவின் எஜமான ருடைய கெளரதையைப் பாதிக்கக்கூடிய விஷயம். அதனால்தான் நான் இடை நடுவில் எழுந்து பேசுகிறேன். இல்லாவிட்டால் இந்தக் கலியாணம் முடிந்த பிறகு தனிமையில் நான் ஆக வேண்டியதைச் செய்திருப்பேன். வேறொன்றுமில்லை. இதோ எங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் சில கனவான்கள் பேசியதைக் கேட்க, என் மனம் பொறுக்கவில்லை. மூத்த பெண்ணின் புருஷரும், விதவைத் தாயும் தவிர, அவர்களுக்கு நாதியில்லை யென்றும், அவருக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமென்றும் அவர் இந்த வீட்டுப் பிள்ளையாண்டானுக்கு சமதையாக அலங்காரம் செய்துகொண்டு மணையில் உட்கார்ந்து கொண் டிருப்பது புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்டது போன்றதென்றும், இந்த வீட்டுப் பிள்ளையாண்டானுக்கு முன் யோசனையில்லையென்றும் சில கனவான்கள் பேசிக் கொண் டார்கள். அதைக் கேட்க எனக்குச் சகிக்கவில்லை” என்றார்.

அதற்குள் அழகிய மணவாளர், “யார் அப்படிச் சொன்னது: ஒருவரும் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார்கள். உமக்குப் பொறுக்கவில்லையென்றால், அதற்காக நீர் இந்தச் சமயத்தில் எழுந்து கலகம் செய்து மாப்பிள்ளைகளுக்குள் குடுமி முடித்து விடப் பார்க்கிறீரா” என்றார். மற்றவர்களும் உதவிச் சாமியாரை அதட்டத் தொடங்கினர். அவர் நிரம்பவும் பணிவாகக் குனிந்து குனிந்து எல்லோரையும் கும்பிட்டு, ‘இல்லை இல்லை. அப்படி யொன்றுமில்லை. நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேட்கவேண்டும். ஒரே ஒரு நிமிஷம் தயவு செய்ய வேண்டும்”

எனறாா.

மறுபடியும் ஏதேனும் இடையூறு நேர்ந்துவிடுமோவென்று நினைத்துத் திடுக்கிட்டுப்போன பூஞ்சோலையம்மாள், செளந்தர வல்லி, அழகிய மணவாளரின் தாய் தகப்பன்மார் முதலியோர் திக்பிரமை கொண்டு விழிக்கத் தொடங்கினர்.