பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 செளந்தர கோகிலம்

ஏனெனில் தாம் தமது தந்தையைத் தற்செயலாதக் கண்டதுபோல தமது மனிதர்களான மற்றவர்களையும் தாம் 9T T நேரிட்டாலும் நேரிடலாம் என்ற முன் Guy696TI6TE, அவ்வாறு ஊரூராய் நடந்து சென்றார். ஆகவே, ஆனறைய தினம் அவர் பாபநாசத்திற்குப் பக்கத்திலுள்ள ஊருக்குப்போனால் தனது சிறிய தாயாரைப் பற்றிய செய்தி அநேகமாய்க் கிடைத்து . விடுமென்ற நம்பிக்கையும் ஆவலும் எழுந்து தூண்டியது. ஆகையால், அவர் திருவையாற்றிலிருந்து குதிரை வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு தஞ்சைக்குப் போய், அவ்விடத்திலிருந்து ரயில் வண்டியின் மூலமாய்ப் பாபநாசம் போய்ச் சேர்ந்து அங்கிருந்து உடனே புறப்பட்டுத் தமது தந்தை குறிப்பிட்ட ஊரையடைந்து இராமலிங்கம், கமலவல்லி முதலியோரைப் பற்றி அந்த ஊர் கிராம முன்சீப்பு, கர்ணம், இன்னும் மற்ற ஜனங்கள் முதலியோரிடம் தந்திரமாக விசாரித்துப் பார்த்தார். தமது தந்தை பிழைத்துக் கொண்டது சம்பந்தமாக சென்னை துரைத்தனத்தாரும் தாமும் வெளியிட்ட விளம்பரங்களை அந்த ஊரார் படித்து நன்றாக நினைவில் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை திவான் சாமியார் நிச்சயமாகத் தெரிந்து கொண்டார். அதுவுமன்றி, இராமலிங்கம் கமலவல்லி முதலியோரைப் பற்றி முக்கியமான ஒரு தகவலும் அவருக்குக் கிடைத்தது. சுமார் இரண்டு வருஷ காலத்திற்கு முன்பு இராமலிங்கமும், அவரது புதல்வனும், அந்த ஊருக்கு வந்து சில நாட்கள் வரையில் தங்கி இருந்து, பூர்வீகமாய் அவர்களுக்குச் சொந்தமாயிருந்து வந்த நிலத்தை அவர்கள் அந்த ஊரிலிருந்த ஷண்முக வாண்டையார் என்ற ஒருவரிடம் விற்றுவிட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு போனதாகவும், அப்பொழுது அவர்கள், தங்களுக்குத் திருவட மருதூரிலிருந்த சொத்துக்களையும் விற்றுவிட ஏற்பாடு செய்து கொண்டிருந்ததாகவும், எல்லாவற்றையும் பணமாக்கி எடுத்துக் கொண்டு மதுரைக்குப் போய்க் குடியேற உத்தேசித்ததாகவும், அவ்விடத்தில் அரிசி மில்கள் வைத்து ஏதோ பெரிய வர்த்தகம் செய்யப் போவதாகவும், இராமலிங்கம் ஷண்முக வாண்டை யாரிடம் சொன்னதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த முக்கியமான தகவல் தெரியவே, திவான் சாமியார் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த ஆவலும் நம்பிக்கையும், உற்சாகமும், மனவெழுச்சியும்