பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 செளந்தர கோகிலம்

யின் பின்னழகைக் காண்பதற்கே பதினாயிரங் கண்கள் போதாது என்று நினைக்கத்தக்கபடி ஒரே அழகு மயமாக அமைந்திருந்தது. அவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த சுவாமி பல்லக்கில் அமர்ந்து ரஸ்தாவின் நடுவில் வர முன்னும் பின்னும் சுமார் ஐம்பதினாயிரம் ஜனங்கள் ஸ்நானம் செய்து மடியுடுத்தி தம் தம் ஜாதி ஆசாரப் படி திருமண்ணோ, விபூதியோ அணிந்து கைகட்டி பக்தி பரவசர் களாய்ச் சூழ்ந்து சென்று கொண்டிருந்தனர். பஜனைக் கோஷ் டியார் மகா அற்புதமான தியாகராஜ கிருதிகளைப் பாடிக் கல்லும் கரையும்படி தெய்வ பக்தியும் இன்பத்தையும் அள்ளி விசிக் கொண்டே வந்தனர். இரட்டைத் தங்க நாகசுரக்காரர்களும் தவில்காரர்களும் ஒருவரோடொருவர் போட்டியிட்டுத் தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, அது தெய்வ காணமோ வென்று எல்லோரும் எண்ணி அதிலேயே லயித்துப் பரவச மடைந்து போகும்படி செய்து கொண்டிருந்தனர். அடிக்கடி நிவேதனங்களும், கற்பூர ஹாரத்தியும் நடந்தேறின. இடையிடை யில் வாழைப்பழம், சர்க்கரை, வெற்றிலைப் பட்டி, விசிறிகள், பானகம், நீர் மோர், வடைப் பருப்பு, வெல்ல அவல், தயிர் அவல், முதலியவை தாராளமாக வழங்கப்பட்டன. சுமார் அரைப் பர்லாங்கு தூரம் வரையில் ரஸ்தாவில் ஒரே ஜன நெருக்கமாக இருந்தது. ஆகையால், வழிப்போக்கர்கள் தடைப்பட்டுப் போயினர். போக்கு வண்டிகள் செல்ல மாட்டாமல் மூலை முடக்குகளில் போய் ஒதுங்கி நின்றன. நமது திவான் சாமியார் தாம் அவசரமாகத் திருவையாற்றிற்குப் போய் சந்தோஷச் செய்தியைத் தமது தந்தையிடம் தெரிவித்துவிட்டு உடனே திரும்பி வந்து காலை ஒன்பதரை மணிக்குத் தஞ்சையிலிருந்து புறப்படும் வண்டியிலேயே தாம் மதுரைக்குப் போகவேண்டும் என்ற தீர்மானத்தோடு நிரம்பவும் விசையாக வந்து கொண்டிருந் தார். ஆனாலும், ரஸ்தாவை அடைத்துக்கொண்டு நின்ற ஜனக் கும்பலையும் நடுவிலிருந்த பல்லக்கையும் கண்டு நின்று பக்கத்திலிருந்த ஜனங்களிடம் விசாரித்து அன்று இன்ன விசேஷம் என்பதைத் தெரிந்து கொண்டார். அவரது முன்னோர்கள் அதுசரித்து வந்தது சைவ சமயமானாலும், நமது திவான் முதலி யாருக்கு வைஷ்ணவ சமயத்தில் துவேஷமில்லை. ஆதலால்,